தொடரை வென்றது நியூசிலாந்து: ஆட்ட நாயகனாக ரச்சின் ரவீந்திரா தேர்வு!
இலங்கை டெஸ்ட் தொடரையும் தவறவிடும் ஆஸி. வேகப் பந்துவீச்சாளர்!
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை பிரபல ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் தவறவிட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஜோஷ் ஹேசில்வுட், காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக அணியில் ஸ்காட் போலாண்ட் சேர்க்கப்பட்டார்.
இலங்கை தொடரையும் தவறவிடுகிறாரா?
காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜோஷ் ஹேசில்வுட் விளையாடாத நிலையில், இலங்கைக்கு எதிரான தொடரையும் அவர் தவறவிட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: ரோஹித் சர்மா, விராட் கோலியை குறிவைப்பது நியாயமல்ல; யுவராஜ் சிங் ஆதரவு!
இலங்கைக்கு எதிரான தொடரிலிருந்து ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் விலகியுள்ள நிலையில், ஜோஷ் ஹேசில்வுட்டும் இந்தத் தொடரிலிருந்து விலக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவது ஆஸ்திரேலிய அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் இலங்கையில் நடைபெறுகிறது. இலங்கை ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு மிகவும் சாதகமாக இருக்கும் என்பதால், ஆஸ்திரேலிய அணியில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: ஆஸி.யை வீழ்த்தும் வழி எங்களுக்குத் தெரியும்: ககிசோ ரபாடா
ஆஸ்திரேலிய அணியில் மூத்த வீரர் நாதன் லயனுடன், சுழற்பந்துவீச்சாளர்களான டோட் முர்பி மற்றும் மேத்யூ குன்ஹிமேன் இடம்பெறலாம் எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.