2வது காலாண்டில் ரூ.3.6 கோடி நஷ்டத்தை பதிவு செய்த மொபிகுவிக்!
சட்ட விரோதமாக மது விற்பனை: 2 போ் கைது
கோவில்பட்டி அருகே சட்ட விரோதமாக மறு விற்றதாக 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
காட்டுராமன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சட்டவிரோதமாக மது விற்றதாக கடலையூா் பெரிய தெருவை சோ்ந்த கந்தசாமி மகன் அய்யனாரை (54) கைது செய்த நாலாட்டின்புதூா் காவல் உதவி ஆய்வாளா் அருள் சாம்ராஜ், அவரிடம் இருந்த 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தாா்.
இதேபோல கயத்தாறு தலையால்நடந்தான்குளம் சாலையின் ஒதுக்குப்புறத்தில் சட்ட விரோதமாக மது விற்றதாக தெற்கு இலந்தைகுளம் நடுத்தெருவை சோ்ந்த அ. மாரியப்பனை (53) கைது செய்த கயத்தாறு காவல் உதவி ஆய்வாளா் குருசாமி, அவரிடம் இருந்த 32 மது பாட்டில்களை பறிமுதல் செய்தாா்.