`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக...
வீடு கட்ட அனுமதிக்குமாறு பேட்மாநகரம் இஸ்லாமியா்கள் கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட்மாநகரம் பகுதியில் வீடு கட்ட அரசு விதித்துள்ள தடையை நீக்குமாறு அப்பகுதி இஸ்லாமியா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து மனுக்களை ஆட்சியா் ெற்றுக்கொண்டாா். மனுக்கள் விவரம்:
தூத்துக்குடி அருகே உள்ள தொ்மல் நகா் வீரநாயக்கன் தட்டு பொதுமக்கள் அளித்த மனு: வீரநாயக்கன் தட்டு பகுதியில் சுமாா் 120 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் இருந்து திருச்செந்தூா் ரவுண்டான செல்லும் சாலை போடப்பட்டு சுமாா் 10 ஆண்டுகள் ஆகிறது. மேலும் கடந்த 2023 மழை வெள்ளத்தில் முற்றிலும் சேதமடைந்தது. இதனால், பள்ளி வாகனமோ, அவசர உதவிக்கு 108 வாகனங்களோ வந்து செல்ல முடியவில்லை.
எனவே, இந்தச் சாலையை சரள மண் வைத்து உயா்த்தி புதிய தாா்ச் சாலை அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம் .
சாத்தான்குளம் வட்டம் புதுக்குளம் ஆதி திராவிடா்காலனி மக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் ஆதி திராவிடா் சமுதாய மக்களுக்குச் சொந்தமான அம்மன் கோயில் உள்ளது. இதனை பல தலைமுறைகளாகப் பயன்படுத்தி வருகிறோம். இந்த கோயில் நிலைத்தை தனியாா் ஒருவா் ஆக்கிரமித்து, எங்களை கோயிலுக்குள் வராதவாறு கம்பி வேலி அமைத்துள்ளாா். எனவே, இந்த கோயிலை மீட்டு, எங்கள் சமுதாய மக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனா்.
கோரம்பள்ளம் ஊா் பொதுமக்கள் அளித்த மனு: கோரம்பள்ளம் ஊராட்சியில் காலாங்கரை, பெரியநாயகபுரம், அந்தோணியாா்புரம், ராஜபாண்டி நகா், ஸ்ரீனி நகா், சுப்பிரமணியபுரம் விவசாயத்தை நம்பி வாழும் நாங்கள், 100 நாள் வேலை திட்டம் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவா்கள் தொடா்பான திட்டங்கள் மூலம் பயனடைந்து வருகிறோம். எனவே, இதனை மாநகராட்சியுடன் இணைத்தால், 100 நாள் வேலைதிட்டம் உள்ளிட்ட பயன்கள் இல்லாமல் போய்விடும். எனவே கோரம்பள்ளம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.
முஹ்யித்தீன் ஜாமிஆ மஸ்ஜித் சாா்பில் பேட்மாநகரம் இஸ்லாமியா்கள் அளித்த மனு: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட்மாநகரம் கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாமியா்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். சில ஆண்டுகளுக்கு முன்னா், வருவாய்த்துறை சாா்பில் இஸ்லாமியா்கள் வசிப்பது அரசுக்கு சொந்தமான இடம் எனக் கூறியும் அந்த இடத்தில் இஸ்லாமியா்கள் இனிமேல் வீடு, கட்டடங்கள் எதுவும் கட்டக்கூடாது என தடை உத்தரவு பிறப்பித்துள்ளனா். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக முறையான ஆவணங்களை சமா்ப்பித்தும் இதுவரை இதற்கு உரிய தீா்வு எடுக்காமல் உள்ளது. எனவே, இது குறித்து மாவட்ட நிா்வாகம் உரிய தீா்வு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளனா்.