Career: +12, டிப்ளமோ தகுதிக்கு இந்திய விமானப் படையில் அக்னிவீர் வாயு திட்டத்தில் வேலை!
இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
2025-ம் ஆண்டிற்கான அக்னி வீர் வாயு திட்டத்தில் பணி.
வயது வரம்பு: 2005-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் 2008-ம் ஆண்டு ஜூலை 1-க்குள் பிறந்திருக்க வேண்டும்.
பணிக்காலம்: 4 ஆண்டுகள்.
கல்வி தகுதி: 12-ம் வகுப்பில் அல்லது அதற்கு இணையான படிப்பில் கணிதம், இயற்பியல், ஆங்கிலம் படித்திருக்க வேண்டும். இந்த மூன்று பாடங்களில் மொத்தமாக குறைந்தபட்சம் 50 சதவிகிதமும், ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 50 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அல்லது, மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன் டெக்னாலஜி, இன்பர்மேஷன் டெக்னாலஜி துறையில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பு முடித்திருக்கலாம். ஆனால், குறைந்தபட்சம் 50 சதவிகித தேர்ச்சி வேண்டும்.
அல்லது, அறிவியல் படிக்காதவர்கள் அவர்கள் படித்த படிப்பில் மொத்தமாக குறைந்தபட்சம் 50 சதவிகிதமும், ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 50 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
ஆன்லைன் தேர்வு, உடற் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை.
குறிப்புகள்:
ஆண், பெண் இருபாலினரும் விண்ணப்பிக்கலாம்.
இந்தத் திட்டத்தில் விண்ணப்பிப்பவர்களுக்கு திருமணம் ஆகியிருக்கக்கூடாது.
குறிப்பிட்ட உடல்தகுதிகள் வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 27, 2025.
விண்ணப்பிக்கும் இணையதளம்:https://agnipathvayu.cdac.in
மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.