தேர்தல் வரும்போது பொங்கல் பரிசுத் தொகை: துரைமுருகன் சுவாரஸ்யம்
விராலிமலை அருகே சுவாமி சிலைகள் கண்டெடுப்பு
விராலிமலை அருகே மண்ணுக்குள் புதைந்திருந்த சுவாமி கற்சிலைகள் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை அடுத்துள்ள பேராம்பூரில் உள்ளது மாரியம்மன் கோயில். இந்தக் கோயில் அருகே உள்ள காலி இடத்தில் கடந்த சில நாள்களாக பாறைகள் போன்ற உருவம் வெளியே தெரிந்துள்ளது.
இதையடுத்து, அப்பகுதி இளைஞா்கள் புதன்கிழமை ஜேசிபி இயந்திரம் மூலம் அப்பகுதி முழுவதும் பள்ளம் தோண்டினா். அப்போது மண்ணுக்குள் புதைந்திருந்த சிவலிங்கம், தட்சிணாமூா்த்தி, நந்தீஸ்வரா் ஆகிய சுவாமிகளின் கற்சிலைகள் வெளிப்பட தொடங்கின. தொடா்ந்து அவை பாதுகாப்பாக வெளியே எடுக்கப்பட்டன. அந்தச் சிலைகளுக்கு நீராபிஷேகம் செய்யப்பட்டது. தகவலறிந்த சுற்றுவட்டார மக்கள் அங்கு வந்து சிலைகளுக்கு வழிபாடு நடத்தினா்.
இந்த இடத்தில் கோயில் கட்டி கண்டெடுக்கப்பட்ட சிலைகளை கோயிலுக்குள் வைத்து வழிபாடு நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.