விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் கூட்டம்: முதல்வருக்கு அழைப்பு
Career: '2006 டு 2009-ல் பிறந்தவர்களா நீங்கள்... தேசிய பாதுகாப்பு & கடற்படை அகடாமியில் பயிற்சி!'
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் பயிற்சி வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு,
என்ன பணி?
தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகடமியில் பயிற்சி.
குறிப்பு: ஆண்கள், பெண்கள் என இருபாலினரும் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலி பணியிடங்கள்: 406
வயது வரம்பு: இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 2006-ம் ஆண்டு ஜூலை மாதம் 2-ம் தேதியில் இருந்து 2009-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். மேலும், இவர்களுக்கு திருமணமாகியிருக்கக் கூடாது.
கல்வித் தகுதி: 12-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
எழுத்து தேர்வு, நுண்ணறிவு மற்றும் ஆளுமைத் திறன் தேர்வு. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் பயிற்சி அளிக்கப்பட்டு, அதில் பெறும் தேர்ச்சிக்கேற்ப பாதுகாப்பு மற்றும் கடற்படையில் பணி வாய்ப்பு கிடைக்கும்.
தமிழ்நாட்டில் எங்கு தேர்வு நடைபெறும்?
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 31, 2024.
விண்ணப்பிக்கும் இணையதளம்:upsconline.gov.in
மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.