செய்திகள் :

Aus v Ind : 'ஐசிசி யை விட பிசிசிஐதான் அதிகாரமிக்கது' - ஆஸி வீரர்கள் ஓப்பன் டாக்!

post image
பார்டர் கவாஸ்கர் தொடர் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், 'ABC Sports' என்ற ஊடகத்துக்கு பேட்டியளித்திருக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள் சிலர் ஐ.சி.சியை விட பிசிசிஐதான் அதிக அதிகாரம் மிக்கதென கூறியிருக்கின்றனர்.

கம்மின்ஸ், மேக்ஸ்வெல், ஹெட், ஸ்மித் என முக்கியமான ஆஸ்திரேலிய வீரர்களிடம் 'பிசிசிஐ, ஐ.சி.சி, இந்தியன் கிரிக்கெட்' என மூன்று விஷயங்களை குறிப்பிட்டு ஒவ்வொன்றை பற்றியும் ஒரே வார்த்தையில் பதில் சொல்லுங்கள் என சொல்லப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், 'பிசிசிஐ, ஐ.சி.சி, இந்தியன் கிரிக்கெட்' மூன்றுக்குமே 'Big' - பெரியது என ஒரே வார்த்தையில் பதில் கூறினார்.

மேக்ஸ்வெல், ஸ்மித், அலெக்ஸ் கேரி என மூவரும் பிசிசிஐ யை 'Powerful' எனக் குறிப்பிட்டனர். இதில் ஸ்மித் அடுத்ததாக கூறியதுதான் ஹைலைட். முதலில் பிசிசிஐ யை 'Powerful' எனக்கூறியவர், ஐ.சி.சி பற்றி 'பிசிசிஐ அளவுக்கு இவர்களுக்கு அதிகாரமில்லை.' எனக் கூறினார். நான் நகைச்சுவையாக கூறினேன். இதை எடிட் செய்துவிடுங்கள் என வேடிக்கையாகவும் கூறினார்.

டிராவிஸ் ஹெட் பதில் சொல்கையில், பிசிசிஐ யை 'Rulers' அதாவது ஆட்சியாளர்கள் எனக் குறிப்பிட்டார். ஐ.சி.சி யை 'Second' - இரண்டாம்பட்சம் எனக் குறிப்பிட்டார்.

Head

உலக கிரிக்கெட்டில் பிசிசிஐதான் வலிமையான போர்டு. அவர்களை தாண்டி ஐ.சி.சியால் எந்த முடிவையும் எடுக்க முடியாதென ஒரு கருத்து இருக்கிறது. அதை வலுப்படுத்தும் வகையில் ஆஸ்திரேலிய வீரர்களே ஓப்பனாக பேசியிருப்பது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Ashwin: "அஷ்வினை விட சிறந்த ஆல்ரவுண்டர் கிடைப்பார்; அதற்கு..." - ஜடேஜா சொல்வதென்ன?

இந்திய அணியின் முக்கிய வீரரான அஷ்வின் பிரிஸ்பேன் டெஸ்ட்டோடு அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்திருந்தார். இந்நிலையில், அவரின் சக வீரரான ஜடேஜா, "அஷ்வின் விட்டுச் சென்றி... மேலும் பார்க்க

``தடைகளை உடைத்து சாதிக்க முடியும்..'' - சர்வதேச தடகளப் போட்டியில் தங்கம் வென்ற மாற்றுத்திறன் மாணவி

விழுப்புரம் அரசுப்பள்ளி மாணவி சுபஸ்ரீசர்வதேச காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கான தடகளப் போட்டியில், தமிழக மாணவி சுபஸ்ரீ பங்கேற்று தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள... மேலும் பார்க்க

``5 பதக்கங்கள் வென்றவருக்கு வெறும் வாழ்த்து மட்டும் தானா?'' - கொதிக்கும் விளையாட்டு ஆர்வலர்கள்

பத்தாவது ஆசிய-பசிபிக் காதுகேளாதோர் விளையாட்டு போட்டிகள் மலேசியாவில் டிசம்பர் 1 முதல் 8 ஆம் தேதி வரை நடந்தது. இந்தப் போட்டியில் தமிழகத்தில் இருந்து 12 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் மொத்தம் 24 பத... மேலும் பார்க்க

``கிரவுண்ட் இருந்தா நிறைய சாதிப்போம்!" -மாநில கால்பந்து கோப்பை வென்ற அரசுப் பள்ளி மாணவிகள் கோரிக்கை

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் சமீபத்தில் மாநில அளவில் நடத்தப்பட்ட 40-வது பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகளில், 40 அணிகள் பங்கேற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் கால்பந்து போட்டியில், த... மேலும் பார்க்க

``மகளுக்கு 1 கோடி பரிசு; தமிழ்நாடு அரசுக்கு நன்றி"- நெகிழும் காசிமாவின் அப்பா

"கேரமில் மூன்று தங்கப்பதக்கம் வென்ற என் மகள் காசிமாவை ஊக்கப்படுத்தும் விதமாக 1 கோடி ரூபாய் பரிசு வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் ஆனந்த விகடனுக்கும் நன்றி... மேலும் பார்க்க