Adani - Sabareesan சந்திப்பு? ஒரேநாடு ஒரேதேர்தலுக்கு Kalaingar ஆதரவு? DMK தமிழன்...
நீதிமன்றக் காவலில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினரைச் சந்தித்த ராகுல் காந்தி!
மகாராஷ்டிரத்தில் நீதிமன்றக் காவலில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினரை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார்.
மகாராஷ்டிர மாநிலம் பர்பானியில் கடந்த டிச. 10 ஆம் தேதி அம்பேத்கர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த அரசமைப்புப் புத்தகம் சேதப்படுத்தப்பட்டதையடுத்து அங்கு பயங்கர வன்முறை ஏற்பட்டது.
இந்த வன்முறையில் 50-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதில் நீதிமன்றக் காவலில் இருந்த சோம்நாத் சூரியவன்சி என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதட்ட சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த சோம்நாத் சூரியவன்சியின் குடும்பத்தினரை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இன்று சந்தித்துப் பேசினர்.
இதையும் படிக்க | 'தேர்தல் விதிகளில் திருத்தம் மிகப்பெரும் அச்சுறுத்தல்' - முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய ராகுல் காந்தி, "அந்த இளைஞர் தலித் என்ற காரணத்திற்காகவும், அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதற்காகவும் கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத்தினர் அவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை, விடியோ, புகைப்படங்களைக் காட்டினார்கள். இது 100% நீதிமன்றக் காவலில் ஏற்பட்டுள்ள மரணம். அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தம் அரசியலமைப்பை அழிக்க வேண்டும் என்பதே. இந்த விவகாரத்திற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். இதைச் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்" என்று கூறினார்.
சோம்நாத் உயிரிழந்ததற்கு காரணமான காவல்துறை அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.