செய்திகள் :

``அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும்" - தமிழக அரசு அறிவிப்பு!

post image
அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவை மாநில அரசே ஏற்கும் எனப் பள்ளி கல்வித்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில், ``அரசுப் பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று நம் நாட்டில் செயல்பட்டு வரும் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விச் செலவினை அரசே முழுமையாக ஏற்கும்.

அரசாணை

மேலும், அயல்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித் தொகை பெற்றுச் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் முதல் பயணத் தொகையை முழுமையாக இவ்வரசே ஏற்றுக்கொள்ளும். இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ. 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்." எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த அறிக்கையை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்திருக்கும் மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ``திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் நமது அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக்காக மற்றுமொரு மகத்தான அரசாணையை இன்று வெளியிட்டுள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்கள்

நம் தமிழ்நாட்டு மாணவர்களை உலகம் போற்றும் அறிஞர்களாக உருவாக்க, இந்தியாவிற்கே முன்மாதிரியான பல புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் பெற்றோர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்." என்று ட்வீட் செய்திருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MaperumSabaithanil

`5, 8-ம் வகுப்புகளில் இனி கட்டாய தேர்ச்சி கிடையாது' - No-detention Policy-யை ரத்து செய்த மத்திய அரசு

பள்ளி கல்வியில் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறையான no-detention policy-யை மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது.இதன்படி, 5 மற்றும் 8-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாத மாண... மேலும் பார்க்க

`கமிஷன் தொகை எங்க?'- வாக்குவாதம் செய்த திமுக கவுன்சிலர்; வைரல் வீடியோவால் பரபரப்பு

தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினராக 9 கவுன்சிலர்கள் உள்ளனர். இங்கு ஒன்றியக்குழுத் தலைவராக திமுகவைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா பணியாற்றி வருகிறார். தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 9 கவுன்ச... மேலும் பார்க்க

TNEB: 'தாமதமாகும் ரீடிங்... அப்டேட் ஆகாத மீட்டர்கள்... பாதிப்பு மக்களுக்கு' - தீர்வு என்ன?!

'நாங்கள் மின்சார கட்டணத்தை உயர்த்தமாட்டோம்' என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கூறிய திமுக அரசு, ஆட்சிக்கு வந்தப் பிறகு மின்சார கட்டணத்தை உயர்த்தியது. அதற்கு மத்திய அரசு மற்றும் ஆட்சியில் முன்னால் இருந்... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: மக்கள் அச்சத்தை கவனப்படுத்திய விகடன்; நீர்த்தேக்கத் தொட்டியைச் சீரமைத்த அதிகாரிகள்!

திருப்பத்தூர் மாவட்டம், தாமலேரி முத்தூர் பகுதியில், 1-வது வார்டில் அமைந்துள்ளது மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி அமைந்திருக்கிறது. அந்தப் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த ஊ... மேலும் பார்க்க

முல்லைப்பெரியாறு: தமிழக பொதுப்பணித்துறை பகுதியில் சிசிடிவி பொருத்த கேரளா எதிர்ப்பு - நடந்தது என்ன?

தமிழக எல்லையில் உள்ள குமுளி அருகே தேக்கடியில் தமிழக பொதுப்பணித்துறை அலுவலகம் மற்றும் அரசுப் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் கண்காணிப்புக்காக 4 சிசிடிவி கேமராக்கள் பொருத்த ஏற்ப... மேலும் பார்க்க

Ranil : திடீர் இந்திய பயணம்; 4 நாள்கள் ஊட்டியில் தங்கும் ரணில் விக்கிரமசிங்க!

இலங்கை அரசியல் களத்தில் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான ரணில் விக்கிரமசிங்க,1994-ம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சிக்கு தலைமை தாங்கி 6 முறை இலங்கையின் பிரதமராக பதவி வகித்தவர். கடந்த 2022- ம் ஆண்டு இலங்க... மேலும் பார்க்க