செய்திகள் :

TNEB: 'தாமதமாகும் ரீடிங்... அப்டேட் ஆகாத மீட்டர்கள்... பாதிப்பு மக்களுக்கு' - தீர்வு என்ன?!

post image

'நாங்கள் மின்சார கட்டணத்தை உயர்த்தமாட்டோம்' என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கூறிய திமுக அரசு, ஆட்சிக்கு வந்தப் பிறகு மின்சார கட்டணத்தை உயர்த்தியது. அதற்கு மத்திய அரசு மற்றும் ஆட்சியில் முன்னால் இருந்த அதிமுக அரசை குற்றம் சாட்டியது திமுக.

தற்போதைய வீட்டு பயன்பாடு மின் கட்டணங்களும், ஸ்லாபும்...

400 யூனிட்டுகள் வரை, யூனிட்டுக்கு ரூ.4.80

401-500 யூனிட்டுகளுக்கு, யூனிட்டுக்கு ரூ.6.45

501-600 யூனிட்டுகளுக்கு, யூனிட்டுக்கு ரூ.8.55

601-800 யூனிட்டுகளுக்கு, யூனிட்டுக்கு ரூ.9.65

801-1000 யூனிட்டுகளுக்கு, யூனிட்டுக்கு ரூ.10.70

1000 யூனிட்டுகளுக்கு மேல், யூனிட்டுக்கு ரூ.11.80

மின் கட்டணங்களும், ஸ்லாபும்...

வீட்டு பயன்பாடு அல்லாத மின் கட்டணங்களும், ஸ்லாபும்...

100 யூனிட்டுகள் வரை, யூனிட்டுக்கு ரூ.6.05

101-500 யூனிட்டுகளுக்கு, யூனிட்டுக்கு ரூ.6.70

500 யூனிட்டுகளுக்கு மேல், யூனிட்டுக்கு ரூ.7.10.

இந்த மின் கட்டண உயர்வுக்கு முதலில் அதிர்ச்சியடைந்த மக்கள், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டு அதற்கு தங்களை பழக்கப்படுத்தி கொண்டனர். ஆனால், அதிலும் ஒரு பிரச்னை எழுந்துள்ளது...இதை புதிய பிரச்னை என்று சொல்லவும் முடியாது.

ஒரு வீட்டில் அல்லது இடத்தில் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்ட தேதியில் மின்சாரத் துறை ஊழியர்கள் வந்து கணக்கெடுத்துவிட்டு செல்வார்கள். அவர்கள் கணக்கு எடுத்து செல்லும் யூனிட்டின் அளவீடு படி தான் நமக்கு மின் கட்டணம் வரும்.

இரண்டு மாதத்திற்கு ஒருமுறை, கிட்டதட்ட இதே காலஅளவில் மின்சாரத் துறை ஊழியர்கள் கணக்கெடுக்க வருவார்கள். ஆனால், சில நேரங்களில் இது தாமதம் ஆகின்றது. இதனால், அவர்கள் நம்முடைய மின்சார பயன்பாட்டு யூனிட்டுகளை கணக்கெடுக்கும்போது யூனிட்டுகள் அதிகமாக வருகிறது. மேலும், ஒரு சில வேளைகளில் நம் மின்சார பயன்பாடு எப்போது வரும் அளவை விட, அதிகரித்து அடுத்த ஸ்லாப்பிற்கு சென்றுவிடுகிறது.

அப்போது, அந்த ஸ்லாபிற்கு ஏத்த மாதிரி நாம் கட்ட வேண்டிய யூனிட்டுகளும் தொகையும் எகிறிவிடுகிறது. இவர்கள் தாமதமாக வந்து கணக்கெடுக்கும்போது, நாம் மின் கட்டணம் செலுத்தவும் தாமதம் ஆகும். இதனால், நமக்கு அபராதத் தொகை வருவதற்கு வாய்ப்புண்டு.

ஏற்கனவே, மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களுக்கு, இது மேலும் ஒரு சுமை எனும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பு தலைவர் காந்தி

'ஏன் இந்த நிலை' என்று தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பு தலைவர் காந்தியிடம் பேசியப்போது, "மின் ஊழியர்களின் இந்தத் தாமத்திற்கு இரண்டு பிரச்னைகள் தான் காரணம்.

ஒன்று, தமிழ்நாடு மின்சார கழகம் வழங்கிய டிஜிட்டல் மீட்டர்கள் அப்டேட் செய்யப்படவில்லை. இன்னொன்று, ரீடிங் எடுக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இந்த இரண்டிற்குமே டிஜிட்டல் மீட்டர்களை அப்டேட் செய்வது தான் எளிய தீர்வு.

குறிப்பிட்ட ஒரு தேதி...

டிஜிட்டல் மீட்டரில் குறிப்பிட்ட ஒரு புரோகிராமை பொருத்தி ஒரு தேதியை நிர்ணயித்துவிட்டால், சரியாக அந்தத் தேதி வரை ஓடிய மின்சாரம் கணக்கெடுக்கப்பட்டு மெமரி சிப்பில் அந்தத் தகவல் சேகரித்து வைக்கப்படும். அப்போது மின்சார துறை ஊழியர் எவ்வளவு தாமதமாக ரீடிங் எடுக்க சென்றாலும், அந்த மெமரி சிப்பில் உள்ள யூனிட்டுகளை மட்டுமே கணக்கெடுப்பார். இதன் மூலம் ஸ்லாப் பிரச்னையை தவிர்க்கலாம்.

இரண்டாவதாக கூறப்பட்ட காரணம் ஊழியர்கள் எண்ணிக்கை குறைவானது ஆகும். தமிழ்நாட்டில் 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டம் அறிமுகப்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் திட்டம் பல்வேறு பிரச்னைகளால் நிலுவையில் உள்ளது. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் அறிமுகப்படுத்தினால் ரீடிங் எடுக்க ஆட்கள் தேவையில்லை. அது நேரடியாக சிஸ்டத்திலேயே பதிவாகிவிடும். இதனால், இந்தப் பணிக்கு புதிதாக ஆட்கள் சேர்க்கப்படவில்லை.

மாதா மாதம் ரீடிங்...

மாதா மாதம் ரீடிங்...

'ஸ்மார்ட் மீட்டர் பொருத்திவிட்டால் இந்தப் பிரச்னை தீர்ந்துவிடும். மாதா மாதம் ரீடிங் எடுக்கலாம்' என்று மின்சாரத் துறை அமைச்சரே ஸ்மார்ட் மீட்டருக்கு விளம்பரம் செய்து வருகிறார். ஆனால், தமிழ்நாட்டை பொறுத்தவரை, 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டம் என்பது தேவையில்லாதது.

இந்தியாவின் பிற மாநிலங்களில் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் இருக்கிறது என்றால் பொருளாதார நிலை, சமூக நிலை போன்ற பல்வேறு காரணங்களால் மின்சாரத் துறை ஊழியர்களால் ரீடிங் எடுக்க குறிப்பிட்ட வீடுகள் அல்லது இடங்களுக்கு செல்ல முடியாது மற்றும் மக்கள் வரிசையில் நின்று கட்டணம் செலுத்த முன்வரமாட்டார்கள். அந்த நிலைகளில், ஆபீசில் இருந்துக்கொண்டே கட்டணம் கட்டாத குறிப்பிட்ட இடத்தில் மட்டும் மின்சாரத்தை தடை செய்ய ஸ்மார்ட் மீட்டர்கள் அங்கெல்லாம் கட்டாயம் தேவை.

ஆனால், தமிழ்நாட்டில் நிலைமையே வேறு. ரீடிங்கில் இருந்து கட்டணத்தைக் கட்ட வரிசையாக நிற்பது வரை அனைத்தும் சரியாக நடக்கும். இதனால், தமிழ்நாட்டில் ரூ.30,000 கோடி கொடுத்து புதியதாக ஸ்மார்ட் மீட்டர் திட்டம் கொண்டுவர தேவையே இல்லை. இதற்கு நாங்கள் 2001-ம் ஆண்டில் பரிந்துரைத்த ஆர்.டி போர்ட் திட்டமே போதுமானது. தமிழ்நாட்டில் 90 சதவிகிதத்திற்கு மேல் அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் மீட்டர் வந்துவிட்டது. அதனால், அந்த மீட்டர்களில் ஆர்.டி போர்ட் கொண்டுவருவது எளிதானது தான்.

தனியார் திட்டம்

தனியார் திட்டம்

ஸ்மார்ட் மீட்டர் திட்டம் என்பது ஒரு தனியார் திட்டம் ஆகும். அதைப் பொருத்தியதும் ரீடிங்கில் இருந்து கட்டணம் வரை அனைத்தும் தனியார் கைகளுக்கு சென்றுவிடும். இது இல்லாமலே, மாத ரீடிங் என்பது இப்போதும் சாத்தியம்.

தமிழ்நாட்டில் வீட்டு மின்சார இணைப்புகளின் எண்ணிக்கை கிட்டதட்ட 2 கோடியே 30 லட்சம். இவர்கள் தான் மாத ரீடிங் கேட்கிறார்கள். இதில் 86 லட்சம் இணைப்புகள் பயன்படுத்தும் யூனிட்டுகள் 100-க்கு கீழ் தான். இதனால், இவர்களுக்கு மாத ரீடிங், இரண்டு மாத ரீடிங் என எதுவும் பெரிய வித்தியாசம் இல்லை. அதன் பிறகு 60 - 62 லட்ச இணைப்புகள் இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் பயன்பாட்டு கீழ் இருக்கிறார்கள். மீதி இருக்கும் கிட்டதட்ட 80 லட்ச இணைப்புகள் 200 யூனிட்டுகளுக்கு மேல் வரும்.

தவறு!

மக்கள் ஒரு மாதத்திற்கு ஒருமுறை ரீடிங் எடுத்தால் கட்டணத்தில் மொத்தமுமாக 100 யூனிட் கழிந்துவிடும் என்றும், மீதி இருக்கும் யூனிட்டுகளுக்கு மட்டும் தொகையை கட்டினால் போதும் என்றும் நினைக்கிறார்கள். ஆனால், இது தவறு. 100 யூனிட் சலுகையில் இரண்டு மாத ரீடிங்கில் ஒரு மாதத்திற்கு 50 யூனிட்டும், இன்னொரு மாதத்திற்கு 50 யூனிட்டும் தான் சலுகை கிடைக்கிறது. அதனால் ஒரு மாதப் பயன்பாட்டில் 100 யூனிட்டுகள் மட்டும் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், 50 யூனிட்டுகளுக்கு சலுகை கிடைக்கும்...மீதி 50 யூனிட்டுகளுக்கு கட்டணம் செலுத்தத்தான் வேண்டும்.

ஆனால், இதில் பிளஸ் என்னவென்றால் இரண்டு மாதத்திற்கு மொத்தமாக கட்ட வேண்டியத் தொகை இரண்டாக பிரியும். அதனால், கட்டணம் செலுத்த சற்று எளிதாக இருக்கும்.

வருமானம் இல்லை

வருமானம் இல்லை

மாதம் ஒருமுறை ரீடிங் எடுக்க செல்ல அதிக ஊழியர்கள் தேவை. ஆனால், அந்த அளவுக்கு துறைக்கு வருமானம் வருவதில்லை என்பதால் தான் இரண்டு மாத ரீடிங் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இதை ஒரு மாத ரீடிங்காக மாற்ற குறைந்தபட்ச தொகையை முதல் மாதம் கட்டலாம் என்றும், இரண்டாவது மாதம் யூனிட் கணக்கெடுத்தப்பின் மீதி இருக்கும் தொகையை கட்டலாம் என்றும் நடைமுறை கொண்டுவந்தால் மக்களுக்கும், அரசுக்கும் எளிதாக இருக்கும்.

வயசு?!

ஒரு மீட்டரின் வயசு 20 - 25. ஆனால், கடந்த 25 ஆண்டுகளில் பல முறை புதிய மீட்டர்கள் மாற்றப்பட்டு, துறை போட்ட முதலீடுகள் வீணாகிப்போய்விட்டது. அதனால், தற்போதும் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் கொண்டு வந்து பணத்தை வீணாக்க வேண்டியதில்லை.

மின்சாரத் துறைக்கு உடனடியாக வருமானம் கொண்டுவர, 15,000 காற்றாலை இணைப்புகளுக்கும், 10,500 உயர் அழுத்த இணைப்புகளுக்கும் சீக்கிரமாகவும், கட்டாயமாகவும் மீட்டர் வைக்க வேண்டும். கிட்டதட்ட 25,000 இணைப்புகளுக்கே மீட்டர் வைக்கமுடியாமல், 2 கோடி இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் கொண்டுவருவோம் என்று கூறுவது சரியல்ல. இந்த 25,000 இணைப்புகளுக்கு சரியான மீட்டர் பொருத்தினால் மின்சார துறைக்கு பாதி வருமானம் சரியாக வந்துவிடும்" என்று பேசினார்.

`கமிஷன் தொகை எங்க?'- வாக்குவாதம் செய்த திமுக கவுன்சிலர்; வைரல் வீடியோவால் பரபரப்பு

தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினராக 9 கவுன்சிலர்கள் உள்ளனர். இங்கு ஒன்றியக்குழுத் தலைவராக திமுகவைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா பணியாற்றி வருகிறார். தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 9 கவுன்ச... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: மக்கள் அச்சத்தை கவனப்படுத்திய விகடன்; நீர்த்தேக்கத் தொட்டியைச் சீரமைத்த அதிகாரிகள்!

திருப்பத்தூர் மாவட்டம், தாமலேரி முத்தூர் பகுதியில், 1-வது வார்டில் அமைந்துள்ளது மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி அமைந்திருக்கிறது. அந்தப் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த ஊ... மேலும் பார்க்க

முல்லைப்பெரியாறு: தமிழக பொதுப்பணித்துறை பகுதியில் சிசிடிவி பொருத்த கேரளா எதிர்ப்பு - நடந்தது என்ன?

தமிழக எல்லையில் உள்ள குமுளி அருகே தேக்கடியில் தமிழக பொதுப்பணித்துறை அலுவலகம் மற்றும் அரசுப் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் கண்காணிப்புக்காக 4 சிசிடிவி கேமராக்கள் பொருத்த ஏற்ப... மேலும் பார்க்க

Ranil : திடீர் இந்திய பயணம்; 4 நாள்கள் ஊட்டியில் தங்கும் ரணில் விக்கிரமசிங்க!

இலங்கை அரசியல் களத்தில் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான ரணில் விக்கிரமசிங்க,1994-ம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சிக்கு தலைமை தாங்கி 6 முறை இலங்கையின் பிரதமராக பதவி வகித்தவர். கடந்த 2022- ம் ஆண்டு இலங்க... மேலும் பார்க்க

Sri Lanka: "கடன் நிலுவையை அடைத்துவிட்டோம்; ஆனாலும்..." - இலங்கை நிதி அமைச்சகம் சொல்வதென்ன?

2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. காய்கறி முதல் பெட்ரோல் வரை தட்டுப்பாடு நிலவியது.இந்நிலையில், தற்போது ஹாங்காங்கை சேர்ந்த ஃபிட்ச் ரேட்டிங் (நம் நாட்டின் சிப... மேலும் பார்க்க

PMK: "10 அம்ச கோரிக்கைகளுடன் போர் நினைவுச் சின்னத்தை முற்றுகையிடுவோம்" - கொதிக்கும் ராமதாஸ்

திருவண்ணாமலையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக உழவர் பேரியக்க மாநில மாநாடு நேற்று (டிசம்பர் 21) நடைபெற்றது.இந்த மாநாட்டில் பா.ம.க-வின் நிறுவனரும், தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் நிறுவனருமான மருத்துவர்... மேலும் பார்க்க