சாம்பியன் டிராபிக்கான அணி தேடல்! அதிரடி காட்டும் நட்சத்திர வீரர்கள்!
BB Tamil 8: பிக் பாஸ் எழுப்பிய அந்த கேள்வி; கண் கலங்கும் போட்டியார்கள் - என்ன நடந்தது?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 78-வது நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 12 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றன. கடந்த வாரம் நாமினேட் ஆகியிருந்த போட்டியாளர்களில் இருந்து ரஞ்சித் எவிக்ட் செய்யப்பட்டார். இந்த வாரம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஃப்ரீஸ் டாஸ்க் நடக்கவுள்ளது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பம் மற்றும் நண்பர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுப்பார்கள்.
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் மூன்றாவது ப்ரோமோவில், வெளி உலகத்தில் இருந்து யாரை நீங்கள் மிகவும் மிஸ் செய்கிறீர்கள் என்று கேட்கப்படுகிறது. அப்போது போட்டியாளர்கள் எல்லோரும் எமோஷனலாகின்றனர். முன் வந்து பேசிய ரயான் 'கூட இருக்கும்போது ஒருவரின் முக்கியத்துவம் தெரியாது, ஆனால் என்று எமோஷனலாகிறார்.
அடுத்து பேசிய ஜெப்ஃரி,'எங்க அம்மா கிட்ட நான் சரியா பேசவே மாட்டேன். அவுங்களுக்கு ஆறுதலா நான் எதுவுமே பண்ணது கிடையாது' என்று அழுகிறார். 'நான் எங்க அப்பா, அம்மாவை ரொம்ப மிஸ் செய்கிறேன்' என்று சௌந்தர்யா கண்கலங்குகிறார்.
'எங்க அண்ணன் என்னை அன்ஷி-னு கூப்பிடுறத ரொம்ப மிஸ் பண்றேன்' என்று அன்ஷிதா கலங்குகிறார். ' 26 வயசுல எங்க அம்மா மடியில படுத்து நான் தூங்கியது கிடையாது. உங்க வாழ்க்கைய பத்தி கேட்கும்போது எனக்கும் குடும்பமா வாழணும்னு ஆசையா இருக்கு' என்று முத்துகுமரன் நெகிழ்ச்சியாகப் பேசுகிறார்.