கட்டாயத் தேர்ச்சி கொள்கையை ரத்து செய்தது மத்திய அரசு!
பள்ளிகளில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சி முறையை மத்திய கல்வித் துறை திங்கள்கிழமை ரத்து செய்துள்ளது.
குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது மத்திய கல்வித் துறை செயலாளர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.
கல்வி உரிமைச் சட்டத்தில் 2019ஆம் ஏற்பட்ட திருத்தம் மூலம் மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் கட்டாயத் தேர்ச்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், கட்டாயத் தேர்ச்சி கொள்கையில் மீண்டும் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது.
5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் ஆண்டின் இறுதித் தேர்வில் தோல்வியடைந்தால், அவர்களுக்கு இரண்டு மாதத்துக்குள் மறுதேர்வு வாய்ப்பு வழங்கப்படும்.
அதிலும் தோல்வி அடையும் பட்சத்தில் மீண்டும் அதே வகுப்பிலேயே தொடர்வார்கள் என்று கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த விதிமுறைகள் கேந்திரிய வித்யாலயாக்கள், நவோத்யாலா வித்யாலயாக்கள் மற்றும் சைனிக் பள்ளிகள் உள்ளிட்ட மத்திய அரசு நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.