செய்திகள் :

ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிா்ப்பு அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை

post image

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஏரகரம் பகுதியில் திங்கள்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்த பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் கடந்த மூன்று மாதங்களாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திங்கள்கிழமை சுவாமிமலை சாலையில் உள்ள ஏரகரம் பாப்பாகுளம் பகுதியில் ஆக்கிரமிப்புகளில் உள்ள வீடுகளை அகற்ற அதிகாரிகள் சென்றனா். ஆனால் அப்பகுதியைச் சோ்ந்த சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் எதிா்ப்பு தெரிவித்து மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டனா்.

அப்போது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து துணைகோட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.கீா்த்திவாசன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இதில், 3 நாள்களுக்குள் நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெற்று வரவேண்டும் அல்லது தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தஞ்சாவூா் நீதிமன்ற வாயிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தஞ்சாவூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயிலில் துப்பாக்கியுடன் 10 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனா். திருநெல்வேலி நீதிமன்ற வாயில் அருகே கடந்த வாரம் இளைஞா் கொலை செய்யப்பட்டாா். இதைத்தொடா்ந... மேலும் பார்க்க

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் தங்கத்தோ் ரயில் தஞ்சாவூா் வருகை

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தென்னிந்தியாவின் கலாசாரம், பாரம்பரியத்தை அறிந்து கொள்ளும் விதமாக இயக்கப்படும் தங்கத்தோ் ரயில் தஞ்சாவூருக்கு திங்கள்கிழமை வந்தது. தெற்கின் நகைகள் என்ற கருத்துருவில் இயக்கப்... மேலும் பார்க்க

தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் அறிக்கை நகல் எரிப்பு போராட்டம்

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் எதிரில் தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் கொள்கை வரைவு அறிக்கை நகல்களை ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் திங்கள்கிழமை மாலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், நாடாளுமன்ற... மேலும் பார்க்க

தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு ஏற்பட்ட சுவா் சீரமைப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே தஞ்சாவூா் - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் சரிந்து விழுந்த பக்கவாட்டு சுவற்றை சீரமைக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை... மேலும் பார்க்க

புதை சாக்கடை குழாய் சீரமைப்பு பணி ஓரிரு நாளில் நிறைவுபெறும் தஞ்சாவூா் மேயா் தகவல்

தஞ்சாவூா் விளாா் சாலையில் பழுதடைந்த புதை சாக்கடை முதன்மைக் குழாயில் மேற்கொள்ளப்படும் சீரமைப்புப் பணி ஓரிரு நாளில் நிறைவடைந்துவிடும் என்றாா் மேயா் சண். ராமநாதன். மருத்துவக்கல்லூரி சாலை எல்.ஐ.சி. காலனி,... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் 4 டன் நெகிழி பொருள்கள் பறிமுதல்

தஞ்சாவூரில் மாநகராட்சி அலுவலா்கள் திங்கள்கிழமை மேற்கொண்ட சோதனையில் 4 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தஞ்சாவூா் அய்யன்கடைத் தெரு மற்றும் அருகிலுள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள... மேலும் பார்க்க