செய்திகள் :

ஹரியாணா: பெண் உள்பட மூவா் சுட்டுக்கொலை: பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு வந்தபோது சம்பவம்

post image

சண்டீகா்: ஹரியாணா மாநிலத்தில் ஹோட்டலின் காா் நிறுத்துமிடத்தில் பெண் உள்பட 3 போ் அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

ஹோட்டலில் நண்பா் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்தபோது ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது:

பன்ஞ்குலாவில் உள்ள ஹோட்டலில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க தில்லியைச் சோ்ந்த விக்கி, விபின், ஹிசாரைச் சோ்ந்த நியா என்ற பெண் ஆகியோா் வந்துள்ளனா். ஹோட்டலில் கீழ் தளத்தில் காரை நிறுத்தி விட்டு மூவரும் இறங்கியபோது மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா், அந்த மூவரையும் சுற்றிவளைத்து துப்பாக்கியால் சுட்டனா்.

இதில், மூவரும் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனா். துப்பாக்கி வெடிக்கும் ஓசை கேட்டு ஹோட்டல் பாதுகாவலா்களும் மற்றவா்களும் காா் நிறுத்துமிடத்துக்கு வரும் முன்பே கொலையாளிகள் சம்பவ இடத்தில் இருந்து மோட்டாா் சைக்கிளில் வேகமாக தப்பியோடிவிட்டனா்.

கொல்லப்பட்டவா்களில் விக்கி (30) என்பவா் மட்டும் குற்றப் பின்னணி உடையவா் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. முன்பகை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தப்பியோடிய கொலையாளிகளை அடையாளம் காணுவதற்காக கண்காணிப்பு கேமரா பதிவுகள் தீவிரமாக ஆய்வு செய்து, சில தடயங்களை கண்டறிந்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டது.

வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைவோம்: கேரள முதல்வரின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!

கேரள மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துத் தெரிவித்த முதல்வர் பினராயி விஜயன், பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு இடையூறு விளைவித்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்... மேலும் பார்க்க

3 மணிநேர விசாரணைக்குப் பிறகு வீடு திரும்பிய அல்லு அர்ஜுன்!

நடிகர் அல்லு அர்ஜுனிடம் ஹைதராபாத் போலீஸார் நடத்திய மூன்று மணிநேர விசாரணை நிறைவடைந்தது.புஷ்பா-2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சி வெளியீட்டின்போது பெண் பலியான விவகாரத்தில் ஹைதராபாத் காவல் துறை அனுப்பிய ச... மேலும் பார்க்க

கொலை முயற்சி, கொள்ளை வழக்குகளில் 21 ஆண்டுகளாகத் தேடப்பட்ட குற்றவாளி கைது!

மகாராஷ்டிரத்தில் கொலை முயற்சி, கொள்ளை போன்ற வழக்குகளில் 21 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த குற்றவாளி இன்று கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிரத்தின் பால்கர் மாவட்டத்தில் உள்ள விகார் நகரில் கடந்த 2003 ஆம் ஆண்ட... மேலும் பார்க்க

பிடிவாதத்தைக் கைவிட்டு விவசாயிகளிடம் பேசுங்கள்: மத்திய அரசுக்கு பஞ்சாப் முதல்வர் கோரிக்கை!

மத்திய அரசு தனது பிடிவாதத்தைக் கைவிட்டு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா விவசாய ச... மேலும் பார்க்க

எம்ஜிஆர் நினைவுநாளில் பவண் கல்யாண் சொன்ன விஷயம்..!

ஆந்திர பிரதேச துணை முதல்வர் பவண் கல்யாண் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆரை அவரது நினைவுநாளான இன்று(டிச. 24) நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார். பவண் கல்யாண் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,... மேலும் பார்க்க

அம்பேத்கர் விவகாரம்: அடித்துக் கொண்ட காங்கிரஸ் - பாஜக கவுன்சிலர்கள்!!

சண்டீகர் மாநகராட்சிக் கூட்டத்தில் அம்பேத்கர் விவகாரம் விவாதிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக கவுன்சிலர்கள் இடையே மோதல் வெடித்தது.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து உள்து... மேலும் பார்க்க