இந்தாண்டில் அதிகம் வசூலித்த தமிழ் திரைப்படங்கள்!
இந்தாண்டில் வெளியான சில தமிழ்ப் படங்களின் வசூல் ஆச்சரியப்படுத்தியுள்ளன.
2024 ஆம் ஆண்டு நிறைவடையப்போகிறது. இந்தாண்டில், சர்வதேச அளவிலான அங்கீகாரங்களையும் வணிக வெற்றிகளையும் பல இந்தியப் படங்கள் பெற்றன. முக்கியமாக, ஆல் வி இமாஜின் ஏஸ் லைட் (All we imagine as light) திரைப்படம் கேன்ஸ் சர்வதேச திரைவிழாவில் கிராண்ட் பிரிக்ஸ் விருது பெற்று அசத்தியது. தமிழில் உருவான கொட்டுக்காளி திரைப்படத்துக்கும் சர்வதேச வரவேற்புகள் கிடைத்தன.
வணிக ரீதியாக சலார், கல்கி, புஷ்பா - 2, ஸ்ட்ரீ - 2 என பல பிளாக்பஸ்டர் வசூல் படங்களும் அமைந்தன. அப்படி, தமிழிலும் சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றதுடன் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி லாபகரமான வருவாயை ஈட்டின.
இதையும் படிக்க: சிக்கந்தரால் எஸ்கேவுக்கு சிக்கல்?
நடிகர் விஜய்யின் கோட் படம் ரூ. 450 கோடி வரை வசூலித்து முதலிடத்தில் உள்ளது. சிவகார்த்திகேயனின் அமரன் ரூ. 300 கோடியையும் வேட்டையன் ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
மேலும், விஜய் சேதுபதியின் மகாராஜா (ரூ. 170+ கோடி), கமல்ஹாசனின் இந்தியன் - 2 (ரூ.160+ கோடி), தனுஷின் ராயன் (ரூ.150+) சூர்யாவின் கங்குவா (ரூ.130+), அரண்மனை - 4 (ரூ. 110 கோடி), தங்கலான் (ரூ. 90 - 100 கோடி), கேப்டன் மில்லர் (ரூ.90 கோடி) ஆகிய படங்கள் முதல் 10 இடங்களில் உள்ளன.
அதேநேரம், லவ்வர், கருடன், லப்பர் பந்து, பிளாக், மெய்யழகன் போன்ற திரைப்படங்கள் குறைவான பட்ஜெட்டில் உருவாகி வணிக வெற்றியைப் பெற்றதுடன் நல்ல படங்கள் என ரசிகர்களிடம் பாராட்டுகளையும் பெற்றன.