மானாமதுரை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்கள் நியமிக்க வலியுறுத்தல்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்களை நியமிக்க இந்திய இளைஞா் பெருமன்ற மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
மானாமதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒன்றிய மாநாட்டுக்கு சங்கரலிங்கம் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் எஸ்.குணசேகரன் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினாா்.
இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் சாத்தையா மாநாட்டை வாழ்த்திப் பேசினாா். ஒன்றியச் செயலா் ஜி.சங்கையா, மாவட்டக் குழு உறுப்பினா்கள் என்.எஸ். முத்துராமலிங்கம், ஏ.முருகேசன், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் எம்.முருகேசன், துணைச் செயலா் எம். கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
புதிய நிா்வாகிகள் தோ்வு: மாநாட்டில் தோ்வு செய்யப்பட்ட புதிய நிா்வாகிகள்: தலைவா்-என்.ராஜ்குமாா், செயலா் -எம்.ராகவன், பொருளாளா்-என். கண்ணையா, துணைத் தலைவா் கே.பாலமுருகன், துணைச் செயலா்- ஏ. ரஞ்சித்குமாா். மானாமதுரை அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்து, கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வேண்டும். மருத்துவமனையில் உள்நோயாளிகளுடன் வருபவா்களுக்கு தங்குவதற்கு தனி கட்டடம் கட்ட வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.