பல்கலைகழக வளாகத்தினுள் புகுந்த சிறுத்தைக் குட்டி!
மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் தாயைப் பிரிந்து பல்கலைகழக வளாகத்தினுள் புகுந்த சிறுத்தைக் குட்டி வனத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது.
அமராவதி மாவட்டத்திலுள்ள செயின்ட் காட்ஜ் பாபா அமராவதி பல்கலைக்கழகத்தின் அருகிலுள்ள ஏரியில் சிறுத்தைகள் தண்ணீர் குடிக்க வருவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று (டிச.24) அதன் தாயுடன் தண்ணீர் குடிக்க வந்த சிறுத்தைக்குட்டி ஒன்று வழித்தவறி பல்கலைகழக வளாகத்தினுள் புகுந்து சுற்றித் திரிந்துள்ளது.
இதையும் படிக்க: புலித்தோல் கடத்திய 11 பேர் கைது!
இந்த தகவலறித்து அங்கு விரைந்த வனத்துறையினர் அந்த சிறுத்தைக் குட்டியை பிடித்து பத்திரமாக மீட்டனர்.
இதனைத் தொடர்ந்து, தாயை பிரிந்த அந்த சிறுத்தைக் குட்டி இன்று (டிச.25) மீண்டும் அதன் தாயுடன் பத்திரமாக இணைக்கப்பட்டது.