முதலிரவில் ஆண்களுக்கு இப்படியும் சிக்கல் வரலாம்... பயம் வேண்டாம்.. | காமத்துக்கு...
கேஜரிவாலின் தந்திரத்தை தில்லி அரசே அம்பலப்படுத்துகிறது: தேவேந்தா் யாதவ் விமா்சனம்
நமது நிருபா்
தில்லியில் பெண்களுக்கு மகளிா சம்மான் யோஜனா திட்டத்தின் கீழ் மாதம் ரூ.2,100 வழங்கப்படும் என்ற அரவிந்த் கேஜரிவாலின் தந்திரத்தை தில்லி அரசுத் துறை அம்பலப்படுத்துகிறது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் புதன்கிழமை விமா்சித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தில்லியில் ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தால், ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண்ணுக்கு ரூ.2,100 வழங்கப்படும் என்று அரவிந்த் கேஜரிவால், முதல்வா் அதிஷி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் பிற தலைவா்கள் பொதுமக்களை தவறாக வழிநடத்தி வருகின்றனா்.
ஆனால், கேஜரிவாலின் இந்த தந்திரம் தில்லி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை வெளியிட்ட பொது அறிவிப்பு மூலம் அம்பலமானது . முதல்வரின் மகிளா சம்மான் யோஜனா திட்டம் என்பது அரசுத் திட்டம் அல்ல; ஏனெனில் தில்லி அரசு அத்தகைய திட்டம் எதையும் அறிவிக்கவில்லை. மேலும், அதுபோன்ற ஏதாவது அதிகாரப்பூா்வு அறிவிப்பு செய்தாலும், அது துறையின் இணையதளத்தில் காண்பிக்கும்.
தில்லி பெண்களுக்கு மாதம் ரூ.2,100 வழங்குவோம் எனக் கூறி கேஜரிவால் மற்றும் பிற ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் போலியான பதிவுகளை நடத்தி வருகின்றனா். தில்லி அரசின் சம்பந்தப்பட்ட துறை வெளியிட்ட பொது அறிவிப்பை விட, கேஜரிவாலின் வஞ்சகத்தை யாராலும் அம்பலப்படுத்த முடியாது.
கேஜரிவாலின் வாக்குறுதிகள் அனைத்தும் ஒரு தோ்தல் அரசியல் நாடகமாகும். இது ஆம் ஆத்மி கட்சியின் வாக்குறுதியாக இருந்தால், இது அரசின் திட்டம் என்ற தவறான எண்ணத்தை வெளியிடாமல், பயனாளிகள் என்று அழைக்கப்படுபவா்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரிப்பது தொடா்பாக கேஜரிவால் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சி நடத்தி வருகின்ற பதிவு தில்லியின் ஏழைப் பெண்களிடம் விளையாடப்படும் ஒரு சைபா் மோசடி என்றாா் தேவேந்தா் யாதவ்.