Manmohan Singh : தாராளமயமாக்கல் `முதல்' RTI வரை... - மன்மோகன் சிங்-ன் `4' முக்கி...
பிக் பாஸ் 8: ஜாக்குலினை விமர்சித்த ஜெஃப்ரியின் குடும்பம்!
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் ஜெஃப்ரி குறித்து ஜாக்குலின் பேசிய விஷயங்களை அவரின் தாயார் குறிப்பிட்டு பேசிய விடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜெஃப்ரி நிலையாக யாரிடமும் நட்பு தொடர்வதில்லை, வாரம் ஒருவரிடம் நட்பு பாராட்டி சுற்றிக்கொண்டிருப்பதாக ஜாக்குலின் தெரிவித்திருந்தார். இதனை சுட்டிக்காட்டி ஜெஃப்ரியின் தாயார் கூறிய கருத்துகளுக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி, 12வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்தில் போட்டியாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வருகை புரிகின்றனர்.
முதல் இரு நாளில் தீபக், ரயான், மஞ்சரி,செளந்தர்யா, ராணவ்,பவித்ரா ஜனனி ஆகிய போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்துசென்றனர்.
அந்தவகையில் மூன்றாவது நாளான இன்று (டிச. 26) ஜெஃப்ரியின் இல்லத்தில் இருந்து அவரின் அம்மா, அப்பா வருகை புரிந்தனர்.
ஜெஃப்ரியின் தாயாரை மிகுந்த மகிழ்ச்சியோடு நடனமாடி ஜெஃப்ரி வரவேற்றார். மற்ற போட்டியாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு ஆனந்தக் கண்ணீரில் வரவேற்ற நிலையில், ஜெஃப்ரி நடனமாடிக்கொண்டே சென்று அவரின் தாயாரைக் கட்டியணைத்து வரவேற்றார்.
அனைவரிடமும் நலம் விசாரித்த பின்னர் போட்டியாளர்கள் மத்தியில் ஜெஃப்ரியின் பெற்றோர் அமர்ந்து பேசினர். அப்போது, போட்டியாளர்கள் குறித்து அவர்களிடம் உள்ள நேர்மறையான விஷயங்கள் குறித்து பேசுகிறார்.
அப்போது குறுக்கிட்ட பிக் பாஸ், வீட்டில் உள்ள ஏதேனும் ஒருபோட்டியாளருடன் முரண்படுகிறீர்களா? எனக் கேள்வி எழுப்புகிறார்.
இதற்கு பதில் அளித்த ஜெஃப்ரியின் தாயார், ஜெஃப்ரி குறித்து ஜாக்குலின் பேசியது மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஜெஃப்ரி ஒவ்வொரு நபரிடமும் ஒவ்வொரு வாரம் நட்பு பாராட்டுவதாக ஜாக்குலின் கூறுகிறார். ஆனால், ஜெஃப்ரி ஆரம்பம் முதலே அனைவரிடமும் நட்புடன் இருந்து வருகிறான். பவித்ரா, சத்யா ஆகியோரிடம் ஆரம்பம் முதேல் பழகி வருகிறான். அவன் தனிப்பட்ட காரணங்களுக்காக யாருடனும் பழகவில்லை. ஜாக்குலின் அவ்வாறு கூறியது எனக்கு வருத்தமாக உள்ளது எனக் கூறுகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கோவா குழு என ஜாக்குலின், செளந்தர்யா, ரயான், ஜெஃப்ரி ஆகியோர் சேர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | பிக் பாஸ் 8: பரம்பரைக்கே பெருமை... முத்துக்குமரனின் தாய் நெகிழ்ச்சி!