செய்திகள் :

ரஜினி, கமலுக்கு படம் இயக்க மாட்டேன்: பாலா

post image

நடிகர் சிவக்குமாரின் கேள்விக்கு இயக்குநர் பாலா சுவாரஸ்யமாகப் பதிலளித்துள்ளார்.

வணங்கான் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக இயக்குநர் பாலாவை மரியாதை செய்யும் நிகழ்வு கடந்த டிச. 18 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.

இதில், நடிகர்கள் அருண் விஜய், சிவகார்த்திகேயன், சமுத்திரகனி, சிவக்குமார், கருணாஸ், வேதிகா, இயக்குநர்கள் மிஷ்கின், லிங்குசாமி, மாரி செல்வராஜ் உள்பட சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிக்க: 2024 - சிறந்த மலையாளப் படங்கள்!

நிகழ்வின் விடியோ ஒளிபரப்பு உரிமத்தை பிரபல நிறுவனம் கைப்பற்றியிருந்தது. தற்போது, நிகழ்வில் பேசியவர்கள் மற்றும் பாலாவிடம் கேட்கப்பட்ட கேள்விகள் என ஒவ்வொரு விடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.

அப்படி, நடிகர் சிவக்குமார் பாலாவிடம் சில கேள்விகளைக் கேட்டிருக்கிறார். குறிப்பாக, ‘சிறுவயதில் உங்களைத் தத்துக் கொடுத்தபின் அம்மாவிடம் வளராதது கஷ்டமாக இருந்ததா?’ எனக் கேட்டதற்கு, ‘ஆமாம். அதனால், சிறு வயதிலேயே மனரீதியாக பாதிப்படைந்தேன்’ என்றார்.

மேலும், ”சினிமாவில் நடிகைகள் யாராவது உங்களைக் காதலித்தார்களா?” என்கிற கேள்விக்கு, “இரண்டு, மூன்று பேர் இருந்தார்கள். இப்போது, அவர்கள் திருமணமாகி குழந்தைகளுடன் இருப்பதால் பெயரைச் சொல்லமாட்டேன்” என நகைச்சுவையாகப் பதிலளித்தார் பாலா.

முக்கியமாக, ‘நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் உங்களிடம் வந்தால் படம் இயக்குவீர்களா” என சிவக்குமார் கேட்டார். அதற்கு பாலா, “வாய்ப்பு இல்லை. அவர்கள் பாதை வேறு. என் பாதை வேறு” என்றார்.

திருவெம்பாவை

திருவெம்பாவை – 12 ஆா்த்த பிறவித் துயா்கெட நாம் ஆா்த்தாடும் தீா்த்தன்நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும் கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி வாா்த்தையும் பேசி வளை... மேலும் பார்க்க

திருப்பாவை

திருப்பாவை – 12 கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி நினைத்து முலைவழியே நின்று பால்சோர நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் நங்காய் பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச் சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் ச... மேலும் பார்க்க

சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு: 41 நாள்களில் 32.5 லட்சம் பக்தா்கள் தரிசனம்

பத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் வியாழக்கிழமை மண்டல பூஜை நிறைவடைந்து நடை சாத்தப்பட்டது. கடந்த 41 நாள்கள் மண்டல காலத்தில் சுமாா் 32.5 லட்சம் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனா். கேரள மாநிலம், ... மேலும் பார்க்க

2024 - சிறந்த மலையாளப் படங்கள்!

இந்தாண்டு வெளியான மலையாளப் படங்களில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பாராட்டுகளைப் பெற்ற திரைப்படங்கள் குறித்து ஒரு பார்வை.இது, தரவரிசைப் பட்டியல் அல்ல. வெளியீட்டுத் தேதியின் அடிப்படையில் 2024-ன் சி... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: ஜாக்குலினை விமர்சித்த ஜெஃப்ரியின் குடும்பம்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் ஜெஃப்ரி குறித்து ஜாக்குலின் பேசிய விஷயங்களை அவரின் தாயார் குறிப்பிட்டு பேசிய விடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜெஃப்ரி நிலையாக யாரிடமும் நட... மேலும் பார்க்க