புதுச்சேரியில் ஜன.12 முதல் தலைக்கவசம் கட்டாயம்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம்
நாட்டை நேர்மையாக வழிநடத்தியவர் மன்மோகன் சிங்: விஜய்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
வயதுமூப்பு காரணமாக முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வியாழக்கிழமை இரவு காலமானார்.
இவரது மறைவுக்கு நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், மக்கள் என அனைத்துத் தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க : மன்மோகன் சிங் உடலுக்கு ராகுல், கார்கே அஞ்சலி!
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,
”முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.
அவரின் மகத்தான ஞானத்துடன் இந்தியாவை நேர்மையுடன் வழிநடத்தினார். அவர் குறைவாக பேசினார், ஆனால் அதிகமாக செய்துள்ளார். இந்திய பொருளாதாரம் உள்ளிட்ட பல உன்னத சேவைகளுக்கு அவரது ஈடு இணையற்ற பங்களிப்பு என்றென்றும் போற்றப்படும்.
இந்த சோகமான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், தொண்டர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.