அரசியல் துணிச்சல் இல்லாமல் இந்தியா-அமெரிக்கா நல்லுறவு ஏற்பட்டிருக்காது: பைடன்
Vidamuyarchi Exclusive: `ஆண்டோ, Folk Marley'னு அனிருத் கூப்பிடுவார்! - `சவதீகா' பற்றி ஆண்டனி தாசன்
அஜித் நடித்திருக்கும் `விடாமுயற்சி' திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகியிருக்கிறது.
அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் முதல் சிங்கிளான `சவதீகா' பாடலை பின்னணி பாடகர் ஆண்டனி தாசன் பாடியிருக்கிறார். இந்தப் பாடலை அறிவு எழுதியிருக்கிறார். `சொடக்கு மேல', `டிப்பம் டப்பம்' போன்ற பாடல்களின் வெற்றியை தொடர்ந்து மீண்டுமொரு முறை அனிருத்துடன் கைகோர்த்திருக்கிறார் ஆண்டனி தாசன். அவரை தொடர்புக் கொண்டு வாழ்த்துகளை சொல்லி இந்தப் பாடல் தொடர்பாக பல கேள்விகள் கேட்டோம்.
மிகுந்த மகிழ்ச்சியிலிருந்த ஆண்டனி தாசன், ``பாடல் நல்லா வந்திருக்கு. இந்த தருணத்துல மக்களுக்கும், அனிருத் சாருக்கும் அஜித் சாருக்கும் மற்றும் `விடாமுயற்சி' படக்குழுவினருக்கு நன்றியை சொல்லிக்கிறேன்." என்றவரிடம் `ஐந்தாவது முறை அனிருத் இசையில் பாடுகிறீர்களே!' எனக் கேட்டதும், `` கொரோனா காலத்துல மூணு வருடம் முடங்கி இருந்துட்டோம். அந்த நேரத்துக்கும் சேர்த்து ஓடணும்னு மன பாரத்துடன் இருக்கும்போது கடவுள் மாதிரி அனிருத் சார் இந்த பாடலைக் கொடுத்திருக்கிறார். 2025-ல இந்த பாடல் மூலமாக அடுத்த டேக் ஓவருக்கு கொண்டு போவார்னு நம்புறேன்.
இதுமட்டுமல்ல, நான் அஜித் சாரின் மிகப்பெரிய ரசிகன். அவருடைய பாடல்கள் அனைத்தையும் நான் கரகாட்டக் கலையில நானும் என் மனைவியும் பாடியிருக்கோம். நான் ரொம்ப எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த வாய்ப்பு இது. நிறைய அஜித் ரசிகர்களும், `எப்போது அஜித் சாருக்கு பாடப்போறீங்க'னு கேட்டுட்டு இருந்தாங்க.
நான் ஏற்கெனவே `விஸ்வாசம்' திரைப்படத்துல ஒரு பாடியிருக்கேன். ஆனால், அந்தப் பாடல் வெளில தெரில. இந்த பாட்டு என் வாழ்க்கைல ரொம்பவே முக்கியமான பாடல். என்னுடைய வாழ்க்கையை அடுத்தக்கட்டத்திற்குக் கொண்டு போகிற ஒரு பாடல். இந்த பாடலுக்காக அனிருத் சார் டீம்ல இருந்து கூப்பிட்டாங்க. அவர்கிட்ட இருந்து அழைப்பு வந்ததும் ரொம்பவே மகிழ்ச்சியாகிட்டேன்.
நான் கடைசியாக அனிருத் சார் இசையில `டிப்பம் டப்பம்' பாடலைப் பாடியிருந்தேன். `உங்களுக்கு ஒரு நல்ல விஷயம் வந்திருக்கு'னு கூப்பிட்டாங்க. வழக்கம்போலவே இந்தப் பாடலும் பாடி முடிச்சதும்தான் இந்த பாடலோட ஹீரோ அஜித் சார்னு தெரிய வந்தது. இந்தப் பாடலை அறிவு தம்பி எழுதியிருக்கிறார். இந்த பாட்டை அறிவு தம்பியோ, அனிருத் சாரோ பாடியிருக்கலாம். ஆனால், என்னை பாட வச்சிருக்காங்க. அதுக்காகவே நன்றி சொல்லிக்கிறேன்.
என்கிட்ட நன்றியை தவிர வேறு எதுவுமில்ல." என்றவர், `` `சவதீகா' என்கிற வார்த்தைக்கு தாய் மொழியில `வெல்கம்' என அர்த்தம். அதுபோல பாடல்ல வர்ற `கப்புங்கா' என்ற வார்த்தைக்கு `நன்றி' என்பதுதான் அர்த்தம். நான் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகள்ல பாடல்கள் பாடிட்டேன். இது மாதிரி மலாய், தாய் மொழிகள்ல பாடணும்னு ஒரு ஆசை இருந்தது. அந்த ஆசை இந்தப் பாடல் மூலமாக நடந்திருக்கு. நான் அடிக்கடி இந்த மொழி பேசுற நாடுகளுக்கு போறதுனால அந்த வார்த்தைகளுடைய அர்த்தங்கள் எனக்குத் தெரியும்.
அந்த வார்த்தை நம்ம தமிழ் பாடல்ல உட்கார்ந்து எல்லோரையும் ஆட வைக்கிறது ரொம்பவே சந்தோஷத்தைக் கொடுக்குது. அனிருத் எப்போதும் ஒரு குழந்தை மாதிரிதான். பெரிய பந்தா அவர்கிட்ட இருக்காது. எப்போதும் `ஆண்டோ, Folk Marley'னு வாஞ்சையோட கூப்பிடுவாரு. இந்தப் பாடலுக்குப் பிறகு நீங்க லிரிகல் வீடியோவுல பார்க்கிற மேக்கிங் வீடியோவுக்கும் போயிருந்தோம். இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கு, என்னுடைய டிவிட்டர் பக்கத்தை கேட்டு என்னை டேக் பண்ணியிருக்காங்க. இதுவே ஒரு பெரிய விஷயம். இது எனக்கு அடையாளத்தைக் கொடுக்கிற மாதிரிதான்!'' எனக் கூறி முடித்துக் கொண்டார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...