செய்திகள் :

ஜீன்ஸ் அணிந்ததால் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து நீக்கப்பட்ட கார்ல்சென்..!

post image

5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மாக்னஸ் கார்ல்சென் ஜீன்ஸ் அணிந்து உலக ரேபிட் அன்ட் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு வந்ததால் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஆடைக் கட்டுப்பாட்டை மீறியதாக கார்ல்செனுக்கு முதல்முறையாக 200 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.17,076) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆடைய மாற்றும்படி கூறியதற்கு கார்ல்சென் மறுத்துவிட்டதால் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

8ஆவது சுற்றில் இந்த சம்பவம் நடைபெற்றது. ஃபிடே அமைப்பு இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:

ஆடைக் கட்டுப்பாடு ஃபிடே குழுவினரான தொழில்முறை வீரர்கள், அனுபவம் வாய்ந்தவர்களால் தீர்மானிக்கப்பட்டது.

இந்த விதிமுறை பல ஆண்டுகளாக இருந்து வருகின்றன. எல்லா போட்டிகளுக்கு முன்பாகவும் இதுகுறித்து போட்டியாளர்களுக்கு தெரிவிக்கப்படும்.

வீரர்களின் தங்கும் இடம் போட்டி நடைபெறும் இடத்துக்கு நடந்துசெல்லும் தூரத்திலே இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை கடைப்பிடிக்க ஏதுவாக இருக்க இந்தமாதிரியான அம்சங்களை ஏற்படுத்தியுள்ளது.

இன்று, மாக்ன்ஸ் கார்ல்சென் தடைசெய்யப்பட்ட ஜீன்ஸ் அணிந்து வந்து விதிமுறைய மீறினார். அவரது உடையை மாற்றும்படி கூறியும் அவர் ஏற்கவில்லை என்பதால் 9ஆவது சுற்றில் பங்கேற்கவில்லை. இது அனைத்து வீரர்களுக்கும் பொருந்தும். இதில் எந்தவிதமான பாகுபாடும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

புரோகபடி லீக்: இறுதி ஆட்டத்தில் இன்று ஹரியாணா-பாட்னா மோதல்

புரோ கபடி லீக் தொடா் 11-ஆவது சீசனின் இறுதி ஆட்டத்தில் ஹரியாணா ஸ்டீலா்ஸ்-பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன. மகாராஷ்டிர மாநிலம், புணேயில் ஞாயிற்றுக்கிழமை இரு அணிகளின் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது. பாட்னா ... மேலும் பார்க்க

பெங்களூரிடம் வீழ்ந்தது சென்னை

ஐஎஸ்எல் கால்பந்து லீக் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் பலம் வாய்ந்த பெங்களூரிடம் 4-2 என்ற கோல் கணக்கில் தோற்றது சென்னையின் எஃப்சி அணி. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை ஜவாஹா்லால் நேரு வி... மேலும் பார்க்க

கூலி, ரெட்ரோ, குட் பேட் அக்லி... களைகட்டும் 2025 கோடை!

நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித் குமார், சூர்யாவின் திரைப்பட வெளியீடுகள் குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது.நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். படத்தின... மேலும் பார்க்க

ரெட்ரோ - வாய் பேச முடியாதவராக நடித்த பூஜா ஹெக்டே?

ரெட்ரோ திரைப்படத்தில் பூஜா ஹெக்டே நடித்த கதாபாத்திரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.சூர்யா - 44 என நீண்ட நாள்களாக அழைக்கப்பட்டு வந்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் - நடிகர் சூர்யா கூட்டணி திரைப்படத்... மேலும் பார்க்க

பொங்கல் வெளியீட்டிலிருந்து விலகும் வணங்கான்?

வணங்கான் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்படுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் வணங்கான். படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ரசிகர... மேலும் பார்க்க