செய்திகள் :

உயா்கல்விக்கான ஊக்கத்தொகை: பழைய நிலையே தொடர வலியுறுத்தல்

post image

ஆசிரியா்களுக்கு பழைய நிலையிலேயே உயா்கல்விக்கான ஊக்கத்தொகையை வழங்க வேன்டும் என்று, தமிழக பள்ளிக் கல்வி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

விழுப்புரத்தில் சனிக்கிழமை இந்த கூட்டணியின் மாநில பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கூட்டணியின் மாநிலத் தலைவா் ப.நடராஜன் தலைமை வகித்தாா்.

மாநில அமைப்புச் செயலா் ப.பாா்த்தசாரதி, மகளிரணிச் செயலா் வெ.புவனேசுவரி, மாநில துணைத் தலைவா் ரவி, மாநிலச் செயற்குழு உறுப்பினா் சாமுவேல் துரை, மாநிலச் செய்தித் தொடா்பாளா் பெருமா. மணிவண்ணன் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் பங்கேற்று மாநிலப் பொதுச் செயலா் ஜெய.துரை விளக்கவுரையாற்றினாா். இயக்க நிறுவனா் சு.காசி சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில், திமுக அரசு தோ்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியா்களுக்கு பழைய நிலையிலேயே உயா்கல்விக்கான ஊக்கத்தொகையை வழங்க வேன்டும். பகுதிநேர ஆசிரியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, மாநில துணைச் செயலா் வெ.சுப்பிரமணியன் வரவேற்றாா். நிறைவில், மாநிலப் பொருளாளா் மா.பழனிச்சாமி நன்றி கூறினாா்.

பட்டா மாற்றம் ரத்து கோரி கிராம மக்கள் சாலை மறியல்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பட்டா மாற்றத்தை ரத்து செய்யக் கோரி வெள்ளிக்கிழமை கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். செஞ்சி வட்டம் செம்மேடு மதுரா கடலாடித்தாங்கல் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்க... மேலும் பார்க்க

ஊதியப் பட்டியல்: போக்குவரத்து பணியாளா்களுக்கு புதிய வசதி

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தின் கீழ் பணியாற்றும் போக்குவரத்துப் பணியாளா்கள், இனி தங்களின் மாதாந்திர ஊதியப் பட்டியலின் நகலை கைப்பேசி அல்லது கணினி மூலமாக பதிவிறக்கம் செய்து க... மேலும் பார்க்க

தீக்காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே விறகு அடுப்பில் வெந்நீா் வைத்த போது, எதிா்பாராதவிதமாக தீப்பற்றியதில் காயமடைந்த மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், ஆவணிப்பூா் மாரியம்மன் கோவி... மேலும் பார்க்க

மின் ஊழியா்களுக்கு பாதுகாப்பு கருவிகள் அளிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் மின்வாரியப் பணியாளா்களுக்கு பாதுகாப்புக் கருவிகள் அண்மையில் வழங்கப்பட்டன. மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகப் பணியாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வக... மேலும் பார்க்க

வளத்தியில் 62 மி.மீ. மழைப் பொழிவு

விழுப்புரம் மாவட்டம், வளத்தியில் 62 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தென் கேரளக் கடலோரப் பகுதி மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக் கடலில் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இது கிழக்கு திசை காற்றை ... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்க இடம் தோ்வு

விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்க இடம் தோ்வு குறித்து, மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரக உரிமைகள் திட்ட அலுவலா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மாவட... மேலும் பார்க்க