சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் நடிகர் ஜெயம் ரவி சாமி தரிசனம்
சோளிங்கரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற யோக லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் நடிகர் ஜெயம் ரவி சாமி தரிசனம் செய்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சுமார் 1305 படிகள் கொண்ட பிரமாண்டமான மலை சோளிங்கர். இந்த மலையின் மீது கோயில் கொண்டிருக்கிறார் யோக லட்சுமி நரசிம்ம பெருமாள். இதையடுத்து 500 படிகளேறினால், சின்னஞ்சிறிய மலையில், ராமபக்த அனுமன், யோக ஆஞ்சநேயராகக் காட்சி தருகிறார்.
இதையும் படிக்க |எங்களுக்கு ஐயா ஐயாதான்: அன்புமணி விளக்கம்
யோக நரசிம்மரையும் யோக ஆஞ்சநேயரையும் தரிசித்துவிட்டால், இதுவரை இருந்த தடைகளும் எதிர்ப்புகளும் இல்லாமல் போகும். காரியம் யாவும் வீரியமாகும். மனதில் இருந்த சஞ்சலங்கள் அனைத்தும் அகலும். இழந்த பொருளை, பிரிந்த உறவை, பதவியை, கெளரவத்தைத் திரும்பப் பெறுவது உறுதி என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யர்கள்.
இந்த நிலையில், சோளிங்கர் வந்த நடிகர் ஜெயம் ரவி, பிரசித்தி பெற்ற யோக லட்சுமி நரசிம்ம பெருமாள் மலைக்கோவிலுக்கு படிகள் வழியாகச் சென்று சாமி தரிசனம் செய்தார் .
பின்னர் ரோப் காரில் கீழே இறங்கி சிறிய மலை ஆஞ்சநேயர் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது பொதுமக்கள் நடிகர் ஜெயம் ரவியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.