வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு! விமான, ரயில் சேவை பாதிப்பு!
சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய 16 வங்கதேசத்தினர் கைது!
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 4 நாள்களில் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய 16 வங்கதேசத்தினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்திய பயங்கரவாதத் தடுப்புப்பிரிவு அதிகாரிகளும் மகாராஷ்டிர மாநில காவல்துறையினரும் இணைந்து மும்பை, நாசிக், நாந்தேடு மற்றும் சத்திரப்பதி சம்பாஜி நகர் ஆகிய மாவட்டங்களில் சிறப்புச் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, போலி ஆதார் அட்டைகளுடன் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய 8 ஆண்கள் மற்றும் 1 பெண் என மொத்தம் 9 வங்கதேசத்தினர் இந்திய வெளிநாட்டவர் சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிக்க: மன்மோகன் சிங் பிறந்த பாகிஸ்தான் கிராமத்தில் இரங்கல் கூட்டம்!
மேலும், எந்தவொரு ஆவணங்களும் இன்றி தானேவின் மங்கோலி பகுதியிலுள்ள குடோனில் தங்கி அங்கு பணிபுரிந்து வந்த 26 முதல் 54 வயதுடைய 7 வங்கதேசத்தினரும் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து செல்போன்களும் ரூ.35,000 மதிப்பிலான பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினரின் மீது இந்திய பாஸ்போர்ட் சட்டம் மற்றும் இந்திய வெளிநாட்டவர் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மட்டும் 19 வழக்குகளில் இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய 43 வங்கதேசத்தினர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.