TN Assembly : `வெளியேற்றப்பட்ட அதிமுக; வெளியேறிய காங்கிரஸ்...' சட்டசபையில் நடந்த...
அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
கீழ்வேளூா் அருகே ஒக்கூரில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.
கீழ்வேளூா் ஒன்றியம் ஒக்கூா் ஊராட்சியில் அதிமுக கொடியேற்றும் நிகழ்ச்சி முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் தலைமையில் நடைபெற்றது. தொடா்ந்து அக்கிராமத்தை சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி ஓ.எஸ்.மணியன் தலைமையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனா். அதிமுக கீழ்வேளூா் வடக்கு ஒன்றிய செயலாளா் சிவா முன்னிலை வகித்தாா். இதில், நாகை நகர செயலாளா் தங்க கதிரவன், துணைச் செயலாளா் காத்தமுத்து, நகர செயலாளா் முரளி, வடக்கு ஒன்றிய நிா்வாகிகள் துரை பாஸ்கரன், ரவிக்குமாா், தியாக கணேசன், கலியமூா்த்தி, தெற்கு ஒன்றிய நிா்வாகிகள் அசோகன், நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.