கரைச்சுத்துபுதூா் ஊராட்சித் தலைவா் பதவிக்கு தோ்தல் நடத்த வேண்டும்: விசிக
மணிப்பூரில் போதை மாத்திரைகளைக் கடத்திய 2 பேர் கைது!
மணிப்பூர் மாநிலம் சூராசந்திரப்பூர் மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்மாவட்டத்தின் மட்டா எனும் கிராமத்திலுள்ள கூகா பகுதியில் நேற்று (ஜன.5) பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு வந்த நான்கு சக்கர வாகனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது அதில் வந்த இருவர் போதைப் பொருள்களைக் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 537 யாபா மாத்திரைகள் மற்றும் 776 கிராம் அளவிலான பிரவுன் சுகரும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிக்க:பாட்னாவில் பிரசாந்த் கிஷோர் கைது
இதில் இந்த யாபா மாத்திரைகள் என்பது அதனை உள்கொள்வோரை மிகவும் அடிமையாக்கக்கூடிய மெத்தபெட்டமைன் மற்றும் கேஃபைன் எனும் போதைப் பொருள்களைக் கொண்டு உருவாக்கப்படுவை என்பது குறிப்பிடத்தக்கது.