செய்திகள் :

ஜன. 11-ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

post image

ஜன. 11 ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன், உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த டிச. 14 ஆம் தேதி காலமானார்.

இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்தது.

இந்த நிலையில், தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதியையும் மத்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளார்.

ஈரோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கவுள்ளது. வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜனவரி 20 ஆம் தேதி கடைசி நாளாகும். தேர்தல் நடைமுறைகள் பிப்ரவரி 10ஆம் தேதி நிறைவடையும்.

இதையும் படிக்க | டங்ஸ்டன் சுரங்கத்தைக் கைவிடும் எண்ணம் திமுகவுக்கு இல்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு

தேர்தல் அறிவிப்பையொட்டி கட்சிகள் தீவிரமாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஜன. 11 ஆம் தேதி நடைபெறும் என்று அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

'அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில், சென்னை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 11.1.2025 சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் ஈரோடு இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தலாம் என்று கூறப்படுகிறது.

17 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்டதாகக் கருதப்பட்ட நபர் உயிருடன் கண்டுபிடிப்பு!

17 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்டதாகக் கருதப்பட்ட நபர் தற்போது உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.பிகார் மாநிலத்தின் டியோரியா பகுதியைச் சேர்ந்த நாதுனி பால் (வயது 50) எனும் நபர் கடந்த 2009 ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

சின்ன திரையில் முதல்முறை... கெட்டி மேளம் தொடரின் ஒளிபரப்பு தேதி!

சின்ன திரையில் முதல்முறையாக ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகவுள்ள கெட்டி மேளம் தொடரின் ஒளிபரப்பு தேதி குறித்த தகவல் தெரியவந்துள்ளது.தற்போது உள்ள சூழலில் இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளம் வயதினரையும் கவரும் வகையி... மேலும் பார்க்க

சபரிமலையில் இதுவரை 40 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்!

சபரிமலையில் நவம்பர் 16 முதல் தற்போது வரை 40.90 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக அருஷ் எஸ். நாயர் தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாத நிறைவையொட்டி டிசம்பர் 26-ல் மண்டல... மேலும் பார்க்க

ஆளும் கட்சி போராட்டத்துக்கு மட்டும் அனுமதியா? காவல் ஆணையருக்கு எதிராக பாஜக வழக்கு!

ஆளும் கட்சி போராட்டத்துக்கு மட்டும் அனுமதி வழங்கிய சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக வழக்குத் தொடர்ந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவ... மேலும் பார்க்க

பாகிஸ்தானிலிருந்து போதைப் பொருள் கடத்திய 2 பேர் கைது!

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பாகிஸ்தான் நாட்டிலிருந்து போதைப் பொருள் கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.அம்மாநிலத்தின் பர்த்தானா சந்திப்பில் காவல் துறையினர் வழக்கமான சோதனை நடவடிக்கைகளில் ஈடுப... மேலும் பார்க்க

சுற்றுலா விமானம் கடலில் விழுந்து விபத்து! 3 பேர் பலி!

ஆஸ்திரேலியா நாட்டின் மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் சிறிய ரக சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில் 3 வெளிநாட்டினர் பலியாகினர்.மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் ரோட்நெஸ்ட் எனும் சுற்றுலாத் தீவு ஒன்று உள்ள... மேலும் பார்க்க