செய்திகள் :

யுஜிசி நெட் தேர்வு தேதியை மாற்றக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

post image

பொங்கல் உள்ளிட்ட நாள்களில் நடைபெறும் யுஜிசி-நெட் தேர்வு தேதிகளை மாற்றியமைக்க மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாட்டில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் கொண்டாடும் ஜனவரி 13 முதல் 16 ஆம் நாள் வரை யுஜிசி-நெட் தேர்வுகளை நடத்திட தேசியத் தேர்வு முகமையால் அறிவிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து மத்திய கல்வி அமைச்சரின் உடனடி கவனத்திற்கு கொண்டுவந்து அத்தேர்வுகளை வேறொரு நாளில் மாற்றியமைக்கக்கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (7-1-2025) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், இந்த ஆண்டு தமிழ்நாட்டின் மிக முக்கியமான பண்டிகையான பொங்கல் பண்டிகை ஜனவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது, இந்தப் பண்டிகை தமிழ்நாட்டின் மிக முக்கியமான பண்டிகை என்றும், தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினராலும் அறுவடைத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது என்றும் தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறை அமைச்சர் 23.12.2024 அன்று மத்திய கல்வி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டிய முதல்வர், ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பண்டிகை ஜனவரி 13 முதல் ஜனவரி 16 வரை நான்கு நாட்கள் கொண்டாடப்படுவதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க | ஆளும் கட்சிக்கு மட்டும் போராட்டத்துக்கு அனுமதியா? - தமிழிசை கேள்வி

பொங்கல் பண்டிகையை அனைத்து தமிழ்ச் சமூகத்தினரும் நான்கு நாட்கள் உற்சாகமாக கொண்டாடுவர் என்றும் எனவே, இந்தப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2025 ஜனவரி 14 முதல் 17 வரை அரசு விடுமுறை நாட்களாக தமிழ்நாடு அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் அறுவடைத் திருவிழாவாக கொண்டாடப்படும் பொங்கல், ஒரு பண்டிகையாக மட்டுமல்லாது ஏறக்குறைய 3,000 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தைக் காட்டுவதாகவும், இந்தப் பொங்கல் பண்டிகையைப் போலவே, ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் மகர சங்கராந்தி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே, திட்டமிட்டபடி பொங்கல் விடுமுறையில் யுஜிசி-நெட் தேர்வை நடத்தினால், ஏராளமான தேர்வர்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் இதே காரணத்திற்காக ஜனவரி 2025இல் நடைபெறவிருந்த பட்டயக் கணக்காளர்கள் தேர்வு ஏற்கனவே மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, யுஜிசி-நெட் தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகளை வேறொரு பொருத்தமான நாட்களில் மாற்றியமைக்க தேவை உள்ளது என்று தாம் கருதுவதாகவும், அறுவடைத் திருவிழா கொண்டாடப்படும் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களின் மாணவர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் தேர்வுகளுக்கு எளிதில் வர இயலும் என்றும் முந்தைய ஆண்டுகளில் பொங்கல் பண்டிகை காலங்களில் தேசிய தேர்வு முகமை யுஜிசி-நெட் தேர்வை நடத்தவில்லை என்று தரவுகள் காட்டுகிறது என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, இத்தகைய சூழ்நிலையில், யுஜிசி-நெட் தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகளை ஜனவரி 13 முதல் 16 வரையிலான நாட்களில் நடத்துவதைத் தவிர்த்து பொருத்தமான வேறு நாட்களுக்கு மாற்றியமைக்குமாறும் மத்திய கல்வி அமைச்சர் தலையிட்டு தமிழ்நாட்டில் மற்றும் பல மாநிலங்களில் அறுவடைத் திருவிழா கொண்டாடப்படும் காலங்களில் யுஜிசி-நெட் தேர்வுகள் நடத்தும் திட்டத்தை மாற்றியமைக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

சாலை விபத்தில் 3 பள்ளிக் குழந்தைகள் உள்பட 4 பேர் பலி!

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கார் மாவட்டத்தில் லாரி மீது ஆட்டோ மோதியதில் 3 பள்ளிக்குழந்தைகள் உள்பட 4 பேர் பலியாகினர்.ராம்கார் மாவட்டத்தின் மதுவாடண்ட் கிராமத்திற்கு அருகில் இன்று (ஜன.8) காலை பள்ளிக்குழந்தைக... மேலும் பார்க்க

அதிமுகவினர் மீது நடவடிக்கை வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

ஆளுநர் உரையன்று நடந்த சம்பவம் தொடர்பாக அதிமுகவினர் மீது நடவடிக்கை வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ஆளுநர் உரையின்போது பேரவையில் பதாகைகளுடன் வந்த அதிமுகவினர் மீது என்ன நடவடிக்கை எடுக்க... மேலும் பார்க்க

எழுத்துப்பிழையால் சிக்கிய கடத்தல் நாடகம்!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில் தன்னைத்தானே கடத்திக்கொண்டு பணம் கேட்டு மிரட்டிய நபர் எழுத்துப்பிழையோடு எழுதிய மிரட்டல் கடித்ததால் சிக்கிக் கொண்டார்.அம்மாவட்டத்தின் பந்தராஹா கிராமத்தைச் சேர... மேலும் பார்க்க

எச்எம்பிவி குறித்து அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

ஹியூமன் மெடா ந்யூமோ தீநுண்மி(எச்எம்பிவி வைரஸ்) குறித்து அச்சப்பட வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் பேசினார்.சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜி.கே. மணி, விஜயபாஸ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: போதைப் பொருள் கடத்திய நபர் கைது!

மகாராஷ்டிர மாநிலத்தில் போதைப் பொருள் கடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினர் இன்று (ஜன.8) தெரிவித்துள்ளனர்.தாணே மாவட்டத்தில் அம்மாநில காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கட... மேலும் பார்க்க

கம்யூனிசம் குறித்த ஆ.ராஜா பேச்சுக்கு முத்தரசன் கண்டனம்

“கம்யூனிஸ்டுகள் சுயநலவாதிகளாக மாறிவிட்ட காரணத்தால் கொள்கை தோற்றுப் போய் விட்டது” என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேச்சுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்ட... மேலும் பார்க்க