மகாராஷ்டிரா: கையோடு வரும் தலை முடி; ஒரே வாரத்தில் வழுக்கை; அச்சத்தில் கிராம மக்க...
எச்எம்பிவி குறித்து அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
ஹியூமன் மெடா ந்யூமோ தீநுண்மி(எச்எம்பிவி வைரஸ்) குறித்து அச்சப்பட வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் பேசினார்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜி.கே. மணி, விஜயபாஸ்கர், வேல்முருகன் உள்ளிடோர் எச்எம்பிவி வைரஸ் தொடர்பாக சட்டப்பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டுவந்தனர்.
இதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். அவர் பேசியதாவது:
இதையும் படிக்க: பொள்ளாச்சி சம்பவம் அதிமுகவினரால் நடத்தப்பட்டது: முதல்வர் ஸ்டாலின்
சீனாவில் பரவிவரும் எச்எம்பிவி வைரஸ் 50 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டது. இந்த வைரஸால் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட இருவர் நலமுடன் உள்ளனர். எச்எம்பிவி தொற்று குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.
காய்ச்சல், சளி பாதிப்புள்ளோர் பொது இடங்களில் முகக்கவசம் அணியவது நல்லது. தொடர்ந்து வரும் வைரஸ் போன்று எச்எம்பிவி தீநுண்மியும் சாதாரணமான ஒன்றுதான். மக்களுக்கு உத்தரவு பிறப்பிக்கும் அளவிற்கு பெரிய பாதிப்பு ஏதும் இல்லை” என்று பேசினார்.