திருப்பதியில் பக்தர்கள் பலி: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!
சண்டீகர் பிரதேசத்துக்கு தலைமைச் செயலர் பதவி உருவாக்கம்!
சண்டீகர் யூனியன் பிரதேசத்துக்கு தலைமைச் செயலாளர் பதவியை உருவாக்கி மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பஞ்சாபில் இருந்து பிரிக்கப்பட்டு, கடந்த 1966-ஆம் ஆண்டில் ஹரியாணா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. தலைநகரான சண்டீகருக்கு இரு மாநிலங்களும் உரிமை கொண்டாடிய நிலையில், அப்பகுதி யூனியன் பிரதேசமாக்கப்பட்டது.
இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக உள்ள சண்டீகா், தற்போது பஞ்சாப் ஆளுநரின் நிா்வாகத்தின்கீழ் உள்ளது. பொது கட்டட வளாகத்திலேயே இரு மாநில சட்டப் பேரவைகள் மற்றும் தலைமைச் செயலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
சமீபத்தில் சண்டீகர் தங்களுக்குதான் சொந்தம் என்று இரு மாநில அரசுகளும் மோதிக் கொண்டனர்.
இதையும் படிக்க : பொள்ளாச்சி சம்பவம் அதிமுகவினரால் நடத்தப்பட்டது: முதல்வர் ஸ்டாலின்
இந்த நிலையில், சண்டீகரில் நிர்வாக மாற்றங்களை ஏற்படுத்தி மத்திய அரசு ஆணையை வெளியிட்டுள்ளது. அதில், சண்டீகர் யூனியன் பிரதேச அரசின் நிர்வாக ஆலோசகர் பதவியை ரத்து செய்து, தலைமைச் செயலாளர் பதவியை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சண்டீகர் பிரதேசத்தில் கூடுதலாக இரண்டு ஐஏஎஸ் பதவிகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதன்மூலம் சண்டீகர் பிரதேசத்துக்கான ஐஏஎஸ் அதிகாரிகள் எண்ணிக்கை 11 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.