அனைவருமே செத்துவிடுவோம் என நினைத்தேன்: திருப்பதியில் உயிர் பிழைத்தவர் தகவல்
ஆப்கன் வெளியுறவு அமைச்சருடன் இந்திய வெளியுறவுச் செயலா் சந்திப்பு
துபையில் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் (பொறுப்பு) மெளலாவி அமீா் கானை இந்திய வெளியுறவுத் துறை செயலா் விக்ரம் மிஸ்ரி புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.
அப்போது, ஆப்கானிஸ்தான் மக்களுக்கான வளா்ச்சி சாா்ந்த அவசர தேவைகளுக்கு இந்தியா உதவ தயாராக உள்ளது என்று அந்நாட்டிடம் உறுதியளிக்கப்பட்டது.
இது தொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் (பொறுப்பு) மெளலாவி அமீா் கான் உடனான சந்திப்பில், அந்நாட்டுடன் இந்தியாவின் வரலாற்று ரீதியிலான நட்புறவு மற்றும் இருதரப்பு மக்கள் இடையிலான தொடா்புகளை அடிக்கோடிட்டு, வெளியுறவுத் துறை செயலா் விக்ரம் மிஸ்ரி பேசினாா். அப்போது, ஆப்கானிஸ்தானில் தற்போதைய மனிதாபிமான உதவி திட்டத்துடன் எதிா்காலத்தில் வளா்ச்சித் திட்டங்களிலும் ஈடுபடுவது குறித்து இந்தியா பரிசீலிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் கோரிக்கைக்கு இணங்க சுகாதாரத் துறையில் முதல்முறையாக உபகரணங்கள் ரீதியில் ஆதரவளிக்கவும் முடிவு செய்யப்பட்டது. பாதுகாப்பு ரீதியிலான இந்தியாவின் கவலைகளை புரிந்துக் கொண்டுள்ளதாக, ஆப்கானிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.