திருப்பதியில் பக்தர்கள் பலி: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!
மனைவி மீது சந்தேகம்; கொலைசெய்து உடலை கட்டிலுக்கு அடியில் மறைத்த கணவன் - டெல்லி `பகீர்'
டெல்லி ஜானக்புரியைச் சேர்ந்தவர் தன்ராஜ். வேலையில்லாமல் மனைவியின் சம்பாத்தியத்தில் வாழ்ந்து வந்தார். அதிக அளவில் மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்த தன்ராஜ், பைக் ஓட்டுவதை ஒரு தொழிலாகச் செய்து வந்தார். இவரது மனைவி தீபிகா (26). ஸ்பா ஒன்றில் வேலை செய்து வந்தார். அந்த பணத்தில்தான் குடும்பத்தை நடத்தி வந்தனர். தன்ராஜ் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டார். அவர் வேறு ஆண் நண்பருடன் நெருங்கிப் பழகுவதாகச் சந்தேகப்பட்டார். அந்த நண்பருடனான தொடர்பை கைவிடும்படி தன்ராஜ் கேட்டுக்கொண்டார். ஆனாலும் தீபிகா அந்த ஆண் நண்பருடன் தொடர்ந்து பேசி வந்ததாக தெரிகிறது. திடீரென தீபிகாவின் மொபைல் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. தீபிகா தங்கி இருந்த வாடகை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து பக்கத்து வீட்டில் வசிக்கும் பொதுமக்கள் இது தொடர்பாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸார் விரைந்து வந்து வீட்டுக் கதவை திறந்து சோதனை செய்தபோது, உள்ளே இருந்த கட்டில் அடியில் இருக்கும் பாக்ஸில் தீபிகாவின் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. உடல் விரைவில் அழுகக் கூடாது என்பதற்காக அவரது வாயில் வெள்ளை டேப் ஒட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து தீபிகாவின் கணவர் தன்ராஜை தேட ஆரம்பித்தனர். அவரது மொபைல் போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் தீபிகா கடந்த மாதம் 29ம் தேதி படுகொலை செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இது குறித்து போலீஸ் துணை கமிஷனர் அங்கிட் கூறுகையில், ''தன்ராஜ் மொபைல் ஆஃப் செய்யப்பட்டு இருந்தாலும்... அவர் ஒரு இடத்தில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி இருந்தார். அதன் அடிப்படையில் அவர் தங்கி இருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.
தீபிகாவைக் கொலைசெய்துவிட்டு அவர் உடலை பல துண்டுகளாக வெட்டி டிஸ்போஸ் செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும், இதற்காக தனது நண்பர் ஒருவரின் உதவியை கோரியதாகவும் தன்ராஜ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அவரது நண்பர் உதவிக்கு வர மறுத்த காரணத்தால் உடலை துண்டு துண்டாக வெட்டும் முடிவை கைவிட்டுள்ளார். ஆனால் கொலை செய்யவும், உடலை துண்டு துண்டாக வெட்டவும் ஏராளமான வீடியோக்களை பார்த்துள்ளார். கொலைக்குப் பிறகு நேராக ஆக்ரா சென்றுள்ளார். அங்கிருந்து டெல்லி வந்து அமிர்த சரஸ் சென்றுள்ளார். தனது மனைவியின் நண்பரையும் கொலை செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் கத்தியுடன் அமிர்தசரஸில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்." என்றார்.