மகாராஷ்டிரா: கையோடு வரும் தலை முடி; ஒரே வாரத்தில் வழுக்கை; அச்சத்தில் கிராம மக்க...
அதிமுகவினர் மீது நடவடிக்கை வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்
ஆளுநர் உரையன்று நடந்த சம்பவம் தொடர்பாக அதிமுகவினர் மீது நடவடிக்கை வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் உரையின்போது பேரவையில் பதாகைகளுடன் வந்த அதிமுகவினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்று பேரவைத் தலைவர் அப்பாவு-விடம் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலளித்து பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு, "ஆளுநர் உரையன்று நடந்தவற்றை எவறாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆளுநர் உரையன்று உரிமை மீறலில் ஈடுபட்டோர் மீது உரிய விசாரணை நடத்தப்படும்.
இதையும் படிக்க: 100 சார் கேள்விகளை கேட்க முடியும்! மு.க. ஸ்டாலின் பேச்சுக்கு அதிமுக அமளி; வெளிநடப்பு
இப்பிரச்னையானது அவை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பப்படும்" என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் ஏற்படாது என்ற உறுதியை அவர்கள் தருவார்கள் எனில் இத்தோடு இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் ” என்று பேசினார்.
இதைத் தொடர்ந்து, அதிமுகவினர் மீதான நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.