செய்திகள் :

ஆளும் கட்சிக்கு மட்டும் போராட்டத்துக்கு அனுமதியா? - தமிழிசை கேள்வி

post image

தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு மட்டும் போராட்டத்துக்கு அனுமதியா? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக சட்டப் பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு, திங்கள்கிழமை தொடங்கியது. அதன்படி சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என். ரவி எந்தவித உரையையும் நிகழ்த்தாமல் திரும்பிச் சென்றார்.

இதையடுத்து தமிழக சட்டப் பேரவையின் மாண்பை ஆளுநர் சீர்குலைப்பதாகவும், தமிழக முன்னேற்றத்தில் தடையாக இருக்கும் ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து திமுக சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி மாவட்டத் தலைநகரங்களில் திமுக முக்கிய தலைவர்கள் தலைமையில் இன்று(செவ்வாய்க்கிழமை) போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க | திமுக போராட்டத்துக்கு மட்டும் அனுமதியா? உயர்நீதிமன்றத்தில் பாமக முறையீடு

இதையடுத்து திமுக போராட்டத்திற்கு அனுமதி கொடுத்தது எப்படி? என முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

'தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்பது பிரிவினைவாதம் என்று சொன்னால் அதை தமிழக அரசுதான் புதிதாக கற்பிக்க முடியும்.

வேங்கை வயல் விவகாரம், ஆண்ட பரம்பரை என திமுக அமைச்சரே கூறியதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? திமுகவினர்தான் பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள்.

கடந்த 10 நாள்களில் ஆயிரக்கணக்கான தலைவர்களும் தொண்டர்களும் கைதானார்கள். எங்களுக்கு போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் ஆளும் கட்சிக்கு அனுமதியா?

எந்த நிலையில் அவர்களுக்கு அனுமதி கொடுத்தார்கள்? நாங்கள் 5 நாள்களுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும்? ஆனால் ஆளும் கட்சியினர் நேற்று அனுமதி பெற்று இன்று போராட்டம் நடத்துகிறார்கள்.

தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறது. தமிழகத்தில் ஜனநாயகம் இல்லவே இல்லை' என்று கூறினார்.

அதிமுகவினர் மீது நடவடிக்கை வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

ஆளுநர் உரையன்று நடந்த சம்பவம் தொடர்பாக அதிமுகவினர் மீது நடவடிக்கை வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ஆளுநர் உரையின்போது பேரவையில் பதாகைகளுடன் வந்த அதிமுகவினர் மீது என்ன நடவடிக்கை எடுக்க... மேலும் பார்க்க

எழுத்துப்பிழையால் சிக்கிய கடத்தல் நாடகம்!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில் தன்னைத்தானே கடத்திக்கொண்டு பணம் கேட்டு மிரட்டிய நபர் எழுத்துப்பிழையோடு எழுதிய மிரட்டல் கடித்ததால் சிக்கிக் கொண்டார்.அம்மாவட்டத்தின் பந்தராஹா கிராமத்தைச் சேர... மேலும் பார்க்க

எச்எம்பிவி குறித்து அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

ஹியூமன் மெடா ந்யூமோ தீநுண்மி(எச்எம்பிவி வைரஸ்) குறித்து அச்சப்பட வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் பேசினார்.சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜி.கே. மணி, விஜயபாஸ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: போதைப் பொருள் கடத்திய நபர் கைது!

மகாராஷ்டிர மாநிலத்தில் போதைப் பொருள் கடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினர் இன்று (ஜன.8) தெரிவித்துள்ளனர்.தாணே மாவட்டத்தில் அம்மாநில காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கட... மேலும் பார்க்க

கம்யூனிசம் குறித்த ஆ.ராஜா பேச்சுக்கு முத்தரசன் கண்டனம்

“கம்யூனிஸ்டுகள் சுயநலவாதிகளாக மாறிவிட்ட காரணத்தால் கொள்கை தோற்றுப் போய் விட்டது” என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேச்சுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்ட... மேலும் பார்க்க

பொள்ளாச்சி சம்பவம் அதிமுகவினரால் நடத்தப்பட்டது: முதல்வர் ஸ்டாலின்

பொள்ளாச்சி சம்பவம் அதிமுகவினரால் நடத்தப்பட்டது என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசினார்.அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எம்எல்... மேலும் பார்க்க