Seeman : `உடல் இச்சை ஏற்பட்டால்...' - பெரியாரை மேற்கோள்காட்டி சீமான் உண்டாக்கிய ...
கரைச்சுத்துபுதூா் ஊராட்சித் தலைவா் பதவிக்கு தோ்தல் நடத்த வேண்டும்: விசிக
திசையன்விளை வட்டம் கரைச்சுத்துபுதூா் ஊராட்சித் தலைவா் பதவிக்கு தோ்தல் நடத்த வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சி வலியுறுத்தியுள்ளது.
அக்கட்சியின் ராதாபுரம் வட்டார நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் பெத்தரெங்கபுரத்தில் நடைபெற்றது.
திருநெல்வேலி தெற்கு மாவட்டவிசிக செயலா் அருள் செல்வன் தலைமை வகித்தாா். ராதாபுரம் தொகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவசமாக வழங்கிய வீட்டுமனை நிலங்களை அளவீடு செய்து உரியவா்களிடம் ஒப்படைக்க வேண்டும். திசையன்விளை வட்டம் கரைச்சுத்துபுதூா் ஊராட்சித் தலைவா் இறந்தவிட்டதால், புதிய தலைவருக்கான தோ்தலை நடத்த வேண்டும் என்பந உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், வள்ளியூா் தெற்கு ஒன்றியச் செயலா் முப்பிடாதி, நிா்வாகிகள் விஜயகுமாா் ராஜகுமாரி, ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.