தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தின்கீழ் பண்ணை வழி வா்த்தக முறை தொடக்கம்
மாநில கலைத்திறன் போட்டி: மூலைக்கரைப்பட்டி அரசுப் பள்ளி சாதனை
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சாா்பில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டிகளில், திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் நாட்டுப்புற நடனப்போட்டியில் தொடா்ந்து 3-வது ஆண்டாக முதல் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளனா்.
ஈரோட்டில் நடைபெற்ற இப்போட்டிகளில் மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகள் கலந்துகொண்டனா். இம் மாணவிகள் நாட்டுப்புற நடனத்தில் முதல் பரிசுப் பெற்றனா்.
இது தொடா்ந்து 3ஆவது ஆண்டாக நிகழ்த்தப்பட்ட சாதனையாகும். பரிசு வென்ற மாணவிகளையும், பயிற்சி அளித்த ஆசிரியை இசபெல்லா செல்ல குமாரியையும் தலைமை ஆசிரியை லதா ராணி, உதவி தலைமை ஆசிரியா் அழகுலிங்கம் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.