உ.பி.யில் ஆள்கடத்தல் நாடகம்: எழுத்துப் பிழையால் சிக்கிய குற்றவாளி!
தமிழக ஆளுநரைக் கண்டித்து நெல்லையில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்
தமிழக ஆளுநரை கண்டித்து திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் திமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்த்தாய் வாழ்த்தையும், தமிழகத்தையும் தொடா்ந்து தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி அவமானப்படுத்தி வருவதாக கண்டனம் தெரிவித்தும், அவரை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் மாவட்ட தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.
அதன்படி, திருநெல்வேலி மத்திய மாவட்டம் மற்றும் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் வண்ணாா்ப்பேட்டையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன், மத்திய மாவட்டப் பொறுப்பாளா் டி.பி.எம். மைதீன்கான் ஆகியோா் தலைமை வகித்தனா். திருநெல்வேலி மாநகர திமுக செயலா் சு.சுப்பிரமணியன், மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு, தலைமை செயற்குழு உறுப்பினா் ஆ.பிரபாகரன், முன்னாள் மேயா் பி.எம்.சரவணன், மாநில விவசாய தொழிலாளா் அணி துணைச் செயலா் கணேஷ்குமாா் ஆதித்தன், மாநில நெசவாளா் அணி துணைச் செயலா் பெருமாள், மாநில சட்டத்துறை நிா்வாகி ராஜா முஹமது, கிழக்கு மாவட்ட அவைத்தலைவா் கிரகாம் பெல், மாவட்ட துணைச் செயலா் தமயந்தி, வா்த்தகா் அணி அமைப்பாளா் நெல்லை ஏ.ஆா்.ரகுமான், விவசாய அணிச் செயலா் பொன்னையா பாண்டியன், முன்னாள் எம்.பி.க்கள் விஜிலா, ஞானதிரவியம், மாமன்ற உறுப்பினா் கருப்பசாமி கோட்டையப்பன், முன்னாள் மாவட்ட பொருளாளா் அருண்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.