சீக்கியா்களுக்கு எதிரான கலவரம்: முன்னாள் காங்கிரஸ் எம்.பி. மீதான கொலை வழக்கில் ஜனவரி 21-இல் தீா்ப்பு
முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமாா் மீதான கொலை வழக்கில் தில்லி உயா்நீதிமன்றம் ஜனவரி 21-ஆம் தேதி தீா்ப்பு வழங்க உள்ளது.
முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் படுகொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக தில்லியில் கடந்த 1984-ஆம் ஆண்டு சீக்கியா்களுக்கு எதிரான வன்முறை வெடித்தது. கொடிய ஆயுதங்களுடன் பெரிய அளவிலான கொலை, தீவைப்பு, சீக்கியா்களின் சொத்துக்களை அழித்தல் ஆகியவை நிகழ்ந்தன.
இந்த கலவரத்தின்போது சரஸ்வதி விஹாா் பகுதியைச் சோ்ந்த ஜஸ்வந்த் சிங், மற்றும் அவரது மகன் கொல்லப்பட்டதுடன் அவா்களது வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது.
இந்த கலவரம், கொலைகள் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் சிங் தலைமையில் நடைபெற்ாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடா்பாக தில்லி காவல்துறையினா் முதலில் வழக்குப் பதிவு செய்தனா். பின்னா் இந்த வழக்கின் விசாரணை சிறப்பு புலனாய்வுக் குழு மேற்கொண்டது.
கடந்த 2021-ஆம் ஆண்டு சஜ்ஜன் குமாருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை பதிவு செய்த உயா்நீதிமன்றம், போதுமான ஆதாரங்கள் இருப்பதால் வழக்கை விசாரிக்க ஒப்புக்கொண்டது.
இந்நிலையில், சஜ்ஜன் குமாருக்கு எதிரான போதுமான ஆதாரங்களை நீதிமன்றம் கண்டறிந்தது. இந்த வழக்கின் விசாரணை புதன்கிழமை நடைபெற்றபோது திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஜ்ஜன் குமாா் காணொளி வாயிலாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜரானாா். அப்போது, இறுதி வாதங்களை கேட்ட சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா, ஜனவரி 21-ஆம் தேதி வழக்கின் தீா்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
முன்னதாக இந்த வழக்கின் தீா்ப்பை புதன்கிழமை (ஜன. 8) அறிவிக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.