ISRO: முதன்முறையாக விண்வெளியில் துளிர்த்த உயிர்; காராமணி விதைகளை முளைக்கச் செய்த...
Facebook: முகநூலில் அத்துமீறல்.. நடிகையின் பதிவுக்கு ஆபாச கமெண்ட்; 27 பேர்மீது வழக்குப்பதிவு
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகை ஹனிரோஸ். இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். தனியார் நிறுவனங்களின் திறப்புவிழாக்களில் கலந்துகொண்டு அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொள்வார்.
இவர் திறப்பு விழா ஒன்றில் கலந்துகொண்டபோது ஒருவர் இரட்டை அர்த்தத்தில் பேசி நடிகை ஹனிரோசை அவமானப்படுத்தியதாக கூறப்பட்டது. அதன்பிறகு அந்த நபர் தனது நிறுவனங்களின் நிகழ்ச்சிகளுக்கு அழைத்தபோது, ஹனிரோஸ் செல்லாமல் மறுத்து வந்தார்.
`பணம் இருந்தால் எந்த பெண்ணையும் ஒருவர் அவமானப்படுத்த முடியுமா?'
இந்த நிலையில், நடிகை ஹனிரோஸ் நேற்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போட்டிருந்த பதிவில், "ஒருவர் இரட்டை அர்த்தத்துடன் வேண்டுமென்றே என்னை பின்தொடர்ந்து அவமானப்படுத்த முயலும் போது, எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? அவர் கூறுவதை ஏற்றுக்கொள்வதுதான் காரணமா என நட்பு வட்டத்தில் கேட்கிறார்கள். அந்த நபர் என்னை நிகழ்ச்சிக்கு அழைத்தபோது நான் செல்ல மறுத்து விட்டேன்.
அதன் பின்னர் நான் செல்லும் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அவர் வருவதும், பெண்மையை அவமதிக்கும் வகையில் என்னைப்பற்றி மீடியாவில் பேசவும் செய்கிறார். பணம் இருந்தால் எந்த பெண்ணையும் ஒருவர் அவமானப்படுத்த முடியுமா. அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தில் இடம் உள்ளது என்பதை அறிய முடிந்தது.
27 பேர்மீது வழக்குப்பதிவு
மன ரீதியான பிரச்னை உள்ளவர்களின் இதுபோன்ற புலம்பல்களை கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் என் வழக்கம். அதனால், எனக்கு எதிர்ப்பு தெரிவிக்க இயலாது என்று நினைக்க வேண்டாம். ஒருவரது தனி சுதந்திரம் என்பது மற்றொருவருடைய தனி சுதந்திரத்தை அவமதிக்கும் சுதந்திரம் இல்லை" என கூறியிருந்தார்.
முகநூலில் நடிகை ஹனிரோஸ் போட்ட பதிவுக்கு சிலர் மோசமான கமெண்ட்களை போட்டிருந்தனர். இதையடுத்து தனது பதிவுக்கு ஆபாச கமெண்ட் போட்ட 30 பேருக்கு எதிராக எர்ணாகுளம் சென்ட்ரல் காவல் நிலையத்தில் ஹனிரோஸ் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் நடிகையின் பதிவுக்கு ஆபாச கமெண்ட் போட்ட 27 பேர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.