Amit Shah: BJP-க்கு Backfire ஆன Ambedkar விவகாரம்; Rahul-க்கு குறிவைக்ககும் MPs?...
Gujarat: பிறப்புறுப்பில் இரும்பு ராட்... 10 வயது சிறுமிக்கு கொடூர பாலியல் வன்கொடுமை
குஜராத்தில் 36 வயது நபர் தனது பக்கத்து வீட்டு 10 வயது சிறுமியைக் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தற்போது வெளியில் தெரிய வந்திருக்கிறது.
போலீஸாரின் கூற்றுப்படி, பரூச் (Bharuch) நகரில் ஜகாடியா தொழிற்சாலைகள் பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இதில், ஈடுபட்ட அந்த நபரின் பெயர் விஜய் பாஸ்வான். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவர், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை வேலைபார்க்கும் தொழிற்சாலையில் வேலைபார்த்துக்கொண்டு, அவரின் வீட்டுக்கு அருகிலேயே வசித்து வந்திருக்கிறார். விஜய் பாஸ்வானுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் இருக்கின்றன.
இத்தகைய சூழலில், கடந்த திங்களன்று வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, விஜய் பாஸ்வான் தனியாகக் கடத்திச் சென்று யாருமற்ற இடத்தில் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, ரத்த வெள்ளத்தில் சிறுமியை அங்கேயே விட்டுச் சென்றுவிட்டார். இதற்கிடையில், காணாமல் போன சிறுமியைத் தேடிக்கொண்டிருந்த தாயார், சிறுமியின் அலறல் சத்தத்தைக் கேட்டு அங்கே வந்தார். பின்னர், உடனடியாக பரூச்சிலுள்ள சிவில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
ஆனால், இடுப்பில் ஏற்பட்ட காயத்தால் சிறுமியின் நிலை மோசமடைந்து உடனடி அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் உருவானதால், அங்கிருந்து வதோதராவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மறுபக்கம், போலீஸ் தரப்பில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சிறுமியின் பிறப்புறுப்பில் அந்த நபர் இரும்பு கம்பியை செருகி காயம் ஏற்படுத்தியது தெரியவந்தது. மேலும், கடந்த மாதமும் சிறுமியை இந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்திருப்பதாக பரூச் மாவட்ட எஸ்.பி மயூர் சாவ்தா நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதோடு, போக்சோ (POCSO) மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான சட்டங்களின் கீழ் விஜய் பாஸ்வான் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், ஜார்கண்ட் மாநிலத்துக்கு அவர் தப்பிச் செல்வதற்குள் கைதுசெய்தனர். தற்போது, ஐந்து நாள்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கும் விஜய் பாஸ்வானை, அடுத்தகட்ட விசாரணைக்காக 14 நாள்கள் காவலில் வைக்க நீதிமன்றத்தில் போலீஸார் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...