சகுனி பட இயக்குநர் காலமானார்
நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சங்கர் தயாள் நெஞ்சுவலி காரணமாக இன்று (டிச. 19) காலமானார். இவருக்கு வயது 54.
சகுனி படத்தைத் தொடர்ந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தைகள் முன்னேற்ற கழகம் என்ற படத்தை இயக்கியிருந்தார்.