அம்பேத்கரை வைத்து அரசியல் ஆதாயம் தேடுகிறதா பாஜக? - Decode | Amit shah | Ambedkar...
பிரிட்டன் மன்னருடன் பேசிய பிரதமர் மோடி!
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிச. 19) தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார்.
இதில் இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை மேலும் உறுதிப்படுத்தும் வகையிலான ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளதாவது,
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் உடன் பேசியது மிகவும் மகிழ்ச்சிகரமானது. இதில் இந்தியா - பிரிட்டன் இடையிலான உறவு, அதனை பேணி பராமரிக்கும் அர்ப்பணிப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டது. அத்துடன் காமன்வெல்த், காலநிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மை உள்ளிட்ட பரஸ்பர நலன்கள் குறித்தும் கருத்துகளை பரிமாறிக்கொண்டோம் என மோடி பதிவிட்டுள்ளார்.
நெதர்லாந்து பிரதமர் டிக் ஷூஃப் உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில், பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதுடன், அமைதி, பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்த பணியாற்ற உறுதி எடுத்துக்கொண்டனர்.