செய்திகள் :

Champions Trophy: இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தில் ICC புதிய அறிவிப்பு; விரைவில் போட்டி அட்டவணை!

post image

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு பிப்ரவரியில் பாகிஸ்தானில் நடைபெறவிருக்கிறது. பாதுகாப்பு காரணங்களால் இந்தியா அங்கு செல்ல மறுப்பதால், இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் வேறு நாட்டில் நடத்தும் நெருக்கடி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ICC) உருவானது. இதனால், போட்டி அட்டவணையை ICC இன்னமும் வெளியிடவில்லை.

Champions Trophy 2025

மறுபக்கம், இந்தியா தங்கள் நாட்டுக்கு வரவேண்டும் என்று கூறிவந்த பாகிஸ்தான், அவர்கள் வரவில்லையென்றால், நாங்களும் இந்தியாவில் ஆட மாட்டோம். இந்தியாவில் நடைபெறும் ICC தொடர்களில் எங்களின் போட்டிகளை வேறு நாட்டில் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை ICC-யிடம் முன்வைத்ததாகத் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தில் ICC அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அதில், ``2024 முதல் 2027 வரையிலான காலகட்டங்களில் இந்தியா அல்லது பாகிஸ்தானில் நடைபெறும் ICC தொடர்களில் இந்த இரு அணிகளின் போட்டிகள் மட்டும் தொடரை நடத்தும் அணியின் முன்மொழிவுடன் பொதுவான மைதானத்தில் நடத்த ICC ஒப்புதல் அளிக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும்." என்று ICC குறிப்பிட்டிருக்கிறது.

ICC Champions Trophy 2025 - இந்தியா, பாகிஸ்தான்

அடுத்தாண்டு மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை அடுத்தாண்டு இந்தியாவும், அதற்கடுத்த ஆண்டு அடைவர் டி20 உலகக் கோப்பையை இந்தியாவுடன் இலங்கையும் சேர்ந்து நடத்துவதால், ICC-யின் இந்த அறிவிப்பின்படி இவ்விரு தொடர்களும் ஹைபிரிட் மாடலில் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MadrasNallaMadras

Ashwin : ``அஷ்வின் அவமானப்படுத்தப்பட்டார்"- தந்தையின் குற்றச்சாட்டும் அஷ்வினின் விளக்கமும்

சமீபத்தில் அத்தனை விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தமிழக வீரர் அஷ்வின் ஓய்வு பெற்றார். இந்நிலையில், அவரின் தந்தை ரவிச்சந்திரன், 'அஷ்வின் அவமானப்படுத்தப்பட்டார்.' எனப் பேசியிருப்பது பரபரப்... மேலும் பார்க்க

Ashwin: `ஜாம்பவான்களின் ரிட்டயர்மெண்டை கொண்டாட மறுக்கும் பிசிசிஐ!' - காரணம் என்ன?

இந்திய கிரிக்கெட்டின் மிக முக்கிய நட்சத்திரமான அஷ்வின் அனைத்துவிதமான சர்வதேசப் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்திருக்கிறார். கடந்த 14 ஆண்டுகளில் இந்திய அணிக்காக அவர் செய்திருக்கும் சாதனைகள் ஏராளம். க... மேலும் பார்க்க

Ashwin: 'எனக்கு வருத்தமெல்லாம் இல்லை, ஆனால்..!' - ஓய்வு குறித்து சென்னையில் அஷ்வின் ஓப்பன் டாக்

அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரரான அஷ்வின் ஓய்வை அறிவித்திருக்கிறார்.ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது போட்டியுடன் இந்த ஓய... மேலும் பார்க்க

Ashwin: 'தோனி மாதிரி... அஷ்வின் இப்படி பண்ணிருக்கக் கூடாது...' - சுனில் கவாஸ்கர் சொல்வதென்ன?

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது போட்டியுடன் இந்திய அணியின் நட்சத்திர வீரரான அஷ்வின் ஓய்வு முடிவை நேற்று அறிவித்தார்.அஷ்வினின் இந்த திடீர் ஓய்வு முடிவு ரசிகர்கள் மத்தியில் ... மேலும் பார்க்க

Ashwin: `சுயமரியாதைமிக்க தமிழக வீரன்' - இந்திய அணியில் அஷ்வின் எப்படி சாதித்தார்?

2008 ஆம் ஆண்டு. ஐ.பி.எல் அப்போதுதான் தொடங்கப்பட்டிருந்தது. முதல் சீசனுக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தங்களுக்கான வீரர்களை ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது.சென்னை அணியும் அப்போது உள்ளூர் அளவில் சிறப்பாக ... மேலும் பார்க்க

Ashwin: அஸ்வினின் டாப் கிரிக்கெட் மொமென்ட்ஸ்- ஒரு பார்வை

பார்டர் கவாஸ்கர் தொடர் நடந்துக் கொண்டிருக்கும்போது அஸ்வின் தன்னுடைய ஓய்வை அறிவித்திருக்கிறார். அவருடைய கரியரில் நிகழ்ந்த சில முக்கியமான நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.* கிரிக்கெட் பழகிக் கொண்... மேலும் பார்க்க