செய்திகள் :

Ashwin: `சுயமரியாதைமிக்க தமிழக வீரன்' - இந்திய அணியில் அஷ்வின் எப்படி சாதித்தார்?

post image
2008 ஆம் ஆண்டு. ஐ.பி.எல் அப்போதுதான் தொடங்கப்பட்டிருந்தது. முதல் சீசனுக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தங்களுக்கான வீரர்களை ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது.

சென்னை அணியும் அப்போது உள்ளூர் அளவில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த அஷ்வினை ஒப்பந்தத்தில் கையெழுத்திட அழைக்கிறது. இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்குச் செல்கிறார் அஷ்வின்.

Ravichandran Ashwin
அங்கே சென்னை அணியில் முக்கியப் பொறுப்பில் இருந்த வி.பி.சந்திரசேகர், 'இது உனக்கு மிகப்பெரிய வாய்ப்பு. தோனி, ஹேடன், முரளிதரன் போன்றோரோடு தோளோடு தோளாக நின்று நீ ஆடப்போகிறாய்!' என அஷ்வினை வாழ்த்துகிறார். கல்லூரிப் பருவத்தில் இருந்த அஷ்வினுக்கு வி.பி யின் வார்த்தைகள் பிரமிப்பை கொடுத்திருக்க வேண்டும். ஆனால், 'நான் இங்கே அவர்களை பிரமிப்பாக பார்க்க வரவில்லை. நான் இங்கே என்னுடைய திறமை என்னவென்பதை காட்ட வந்திருக்கிறேன். இந்த இடத்திற்கு நான் எவ்வளவு தகுதியானவன் என்பதை உலகுக்குக் காட்ட வந்திருக்கிறேன்.' என அஷ்வின் மனதுக்குள் நினைத்துக் கொண்டதாகத் தன் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார் அஷ்வின்
Ashwin

அப்போது அஷ்வினுக்கென்று பெரிய அடையாளம் கிடையாது. உள்ளூரில் நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் தமிழக வீரர். அவ்வளவுதான் அவர். காலம் அப்படியே சுழல்கிறது. அந்த திறமையான உள்ளூர் வீரன் இப்போது கிரிக்கெட்டில் ஒரு தலைமுறையையே கட்டி ஆண்டு தன்னுடைய ஓய்வையே அறிவித்துவிட்டார். மனதுக்குள் தன்னுடைய திறமை சார்ந்து எவ்வளவு நம்பிக்கை இருந்திருந்தால் அந்த இளம் வயதில் அஷ்வின் அப்படி நினைத்திருக்க முடியும்? அதுவெறும் கனவாகவும் போய்விடவில்லை.

மனதில் என்ன நினைத்தாரோ அதை அப்படியே சாதித்திருக்கிறார். தோனி, ஹேடன், முரளிதரன் என அன்று அவர் முன் அடுக்கப்பட்ட பெயர்களின் வரிசையிலேயே அவருடைய பெயரையும் இணைத்துவிட்டார். அதுதான் அஷ்வின். அஷ்வினைப் பற்றி பேசுகையில் அவருடைய ரெக்கார்டுகளைப் பற்றி அதிகம் பேசுவார்கள். ஆனால், ரெக்கார்டுகளைத் தாண்டி கிரிக்கெட்டில் அஷ்வின் வெளிக்காட்டிய தீர்க்கமான குணாதிசயம்தான் அவரை மகத்தான கிரிக்கெட்டராக மாற்றியது.

அஷ்வின் ஒரு பெரும் நம்பிக்கையாளன். யாரை பார்த்தும் பிரமிப்படையாத, அஞ்சாத வீரன். இதற்கு அவரின் கரியரில் பல சம்பவங்களை முன்னுதாரணங்களாக அடுக்கலாம். 2007 உலகக்கோப்பைக்கு முன்பாக பயிற்சிக்காக சென்னை வந்திருந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நெட் பௌலராக அஷ்வின் செல்கிறார். முதல் நாளிலேயே கெய்லுக்கு வீசும் வாய்ப்பு அஷ்வினுக்கு கிடைக்கிறது. ஒரு நாள் முழுக்க கெய்லுக்கு பந்துவீசுகிறார். நன்றாகவும் வீசுகிறார். கெய்லே சில இடங்களில் தடுமாறியும் போகிறார். ஆனாலும் கெய்ல் அஷ்வினை பாராட்டவே இல்லை. தோளில் கூட தட்டிக்கொடுக்கவில்லை. இந்த ஆட்டிடியூட் அஷ்வினுக்குப் பிடிக்கவில்லை.

Ashwin

என்னை பௌலிங் மெஷின் போன்று பார்ப்பவர்களின் மத்தியில் நான் பந்துவீசவில்லை எனக் கூறிவிட்டு மறுநாளிலிருந்து நெட் பௌலராக செல்லவே இல்லை. அந்தக் காலகட்டத்தில் அஷ்வினுக்கு அது மாபெரும் வாய்ப்பு. ஆனாலும் தன்னை மனதளவில் குறைவாக உணரவைக்கும் இடத்தில், தனக்கான மதிப்பு இல்லாத இடத்தில் அது எவ்வளவு வாய்ப்பாக இருந்தாலும் அஷ்வின் அதில் நீடிக்க விரும்பவில்லை. இந்த விடாப்பிடித்தன்மைதான் அஷ்வினின் கரியரை இவ்வளவு நீண்டதாகவும் வெற்றிகரமானதாகவும் மாற்றியிருக்கிறது.

மனதளவில் இவ்வளவு வலுவாக இருந்ததால்தான் அவரால் கிரிக்கெட்டில் பல இக்கட்டான கட்டங்களை இலகுவாக சமாளிக்க முடிந்தது. சிக்சாசுரனான கெய்லுக்கு முதல் ஓவரை வீசி டக் அவுட் ஆக்க அவரின் டெக்னிக்கை விட மனோபலம்தான் அவருக்கு பெரிய உதவியாக இருந்தது. அதேமாதிரி, 2013 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஓவரையும் அஷ்வின்தான் வீசியிருப்பார். இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராகக் கடைசி ஓவரை வீசி அவர்களை வீழ்த்தி இந்தியாவை கோப்பையை வெல்ல வைத்திருப்பார்.

Ashwin

தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்த வரைக்கும் அணித்தேர்வில் அவரின் கை ஓங்கியிருந்த வரைக்கும் அஷ்வின் மூன்று பார்மட்களிலும் ஆடக்கூடிய வீரராக இருந்தார். 2016 க்குப் பிறகு அணி மொத்தமாக விராட் கோலியின் கையில் வந்தது. கோலி தனக்கான அணியை கட்டமைக்க ஆரம்பித்தார். அதில் அஷ்வினுக்கு இடமில்லை. குல்தீப், சஹார் போன்ற பௌலர்களுக்கு கோலி முக்கியத்துவம் கொடுத்தார். வெறுமென ரெட்பாலில் ஆடும் வீரராக மட்டும் அஷ்வின் சுருக்கப்பட்டார். அதிலுமே குறிப்பாக இந்தியாவில் வைத்து நடக்கும் போட்டிகளில் மட்டுமே அஷ்வினை எடுத்தனர். வெளிநாடுகளில் குல்தீப்தான் முதல் சாய்ஸாக இருந்தார். 30 களை கடந்த வீரர் இப்படியொரு ஒதுக்கப்பட்ட நிலையிலிருந்து மீண்டு வருவது ரொம்பவே கடினம். ஆனால், அஷ்வின் மீண்டு வந்தார். தன்னை எந்த ஒயிட் பால் கிரிக்கெட்டிலிருந்து ஒதுக்கினார்களோ அதே ஒயிட் பால் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்தார். 2021 டி20 உலகக்கோப்பையிலும் ஆடினார். டெஸ்ட் போட்டிகளிலும் மனதை விடாமல் நின்று சாதித்துக் காட்டினார்.

சிட்னியில் விஹாரியுடன் இணைந்து முதுகு வலியோடு நிற்கக்கூட முடியாமல் 3 மணி நேரத்துக்கு அவர் ஆடிய ஆட்டத்தை யாரால் மறக்க முடியும்? அத்தனை ஒதுக்கலுக்கும் பிறகுதான் 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடினார். 500 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார். கிரிக்கெட் ஆடுவது மட்டும்தான் என்னுடைய வேலை. யாருக்காகவும் எதற்காகவும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்காக கடினமாக உழைக்கவும் செய்தார். காயமின்றி பிட்டாக இருக்கும்பட்சத்தில் கிரிக்கெட் ஆடாமல் அவர் ஓய்வில் இருந்ததே இல்லை. 2021 சமயத்தில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருந்த இந்திய அணி மொத்தமும் தொடருக்கு முன்பாக சுற்றுலா சென்று கொண்டிருந்த நேரத்தில் அஷ்வின் மட்டும் கவுன்ட்டி போட்டிகளில் சென்று ஆடிக்கொண்டிருந்தார்.

Ashwin

தமிழ்நாடு ப்ரீமியர் லீகில் ஓப்பனிங் பேட்டராக இறங்கி இன்னும் தனக்குள் இருக்கும் பேட்டரை உயிர்ப்போடு வைத்துக் கொண்டிருந்தார். அதுபோக பல இளம் வீரர்களையும் அடையாளம் கண்டு அவர்களையும் கைத்தூக்கிவிட்டார். டிவிஷன் போட்டிகளை கூட தவிர்க்காமல் தொடர்ந்து ஆடிக்கொண்டேதான் இருந்தார்.

அஷ்வினின் நம்பர்களை பிரமிப்பாக பேசுகையில் அதற்கு பின்னால் அவர் போட்டிருக்கும் உழைப்பையும் திடமான மனநிலையையும் பலரும் பேச மறந்துவிடுகின்றனர். யாருக்கும் அஞ்சாத யாரையும் பிரமிப்பாக பார்க்காத சுயமரியாதைமிக்க அவரின் குணாதிசயம்தான் அவரை இவ்வளவு பெரிய வீரராக உயர்த்தியிருக்கிறது. இப்போது ஓய்வை அறிவித்திருக்கிறார். அதுவுமே அவராக எடுத்த முடிவுதான். அணி தன்னை ஒரு முதல் வாய்ப்பாக பார்க்கவில்லை, தன்னை கடந்து செல்ல நினைக்கிறது எனும்போது சரியான சமயத்தில் தானாக முன்வந்து ஓய்வை அறிவித்திருக்கிறார் இந்தியாவின் ஆகச்சிறந்த வீரர்களுள் ஒருவன். `இந்த இடத்திற்கு நான் எவ்வளவு தகுதியானவன்' என்பதை உலகுக்குக் காட்ட வந்திருக்கிறேன் என்ற அஷ்வின் அதை நிகழ்த்திக் காட்டி அதே தன்னம்பிக்கையுடன் விடைபெற்றிருக்கிறார். Thank You Ash Anna

Ashwin: அஸ்வினின் டாப் கிரிக்கெட் மொமென்ட்ஸ்- ஒரு பார்வை

பார்டர் கவாஸ்கர் தொடர் நடந்துக் கொண்டிருக்கும்போது அஸ்வின் தன்னுடைய ஓய்வை அறிவித்திருக்கிறார். அவருடைய கரியரில் நிகழ்ந்த சில முக்கியமான நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.* கிரிக்கெட் பழகிக் கொண்... மேலும் பார்க்க

Ashwin: ``அவங்க அப்பா எல்லா மேட்ச்சும் பாக்க வருவார்" - அஷ்வின் குறித்து நெகிழும் TNCA பழனி

இந்திய அணியின் மிக முக்கிய வீரரான அஷ்வின் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்திருக்கிறார். இந்நிலையில், அஷ்வினை சிறுவயதிலிருந்தே பார்த்து வரும் அவரது கிரிக்கெட் கரியரில் முக்கியப் பங்க... மேலும் பார்க்க

Ashwin : ஓய்வு முடிவு; எமோஷ்னல் அஷ்வின், ஹக் கொடுத்த கோலி - நெகிழ்ச்சி தருணங்கள் | Video

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஷ்வின் ஓய்வை அறிவித்திருக்கிறார்.இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென அனைத்துவிதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இர... மேலும் பார்க்க

Ashwin: `நான் தேவையில்லையெனில் ஓய்வு பெறுகிறேன்'- கறாராகச் சொன்ன அஷ்வின்; எப்போது எடுத்த முடிவு?

இந்திய அணியின் மிக முக்கிய வீரரான அஷ்வின் அனைத்து விதமான சர்வதேசப் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்திருக்கிறார். இந்நிலையில், அவர் திடீரென ஓய்வை அறிவித்ததற்கான காரணம் என்னவென இந்திய அணியின் கேப்டன் ர... மேலும் பார்க்க

Ashwin: `விடைபெறுகிறேன்' - ஓய்வை அறிவித்தார் அஷ்வின் காரணம் என்ன?

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள் இப்போது முடிந்திருக்கிறது. இந்நிலையில், ரவிச்சந்திரன் அஷ்வின் திடீரென ஓய்வை அறிவித்த... மேலும் பார்க்க

Prithvi Shaw: `கடவுளே இன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டும்' - பிரித்வி ஷா விரக்தியின் காரணம் என்ன?

இந்திய கிரிக்கெட்டில் சிறப்பான இடத்தை எட்டக்கூடியவர் என்று ஒருகட்டத்தில் பலராலும் எதிர்பார்க்கப்பட்டவர் பிரித்வி ஷா. 2018-ல் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல... மேலும் பார்க்க