பிரதமர் மோடியுடன் சந்திப்பு; `அரசியல் பேசவில்லை' - மாதுளை பழங்களை வழங்கிய சரத் ப...
20% லாபம் அளித்த லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்!
கடந்த 5 ஆண்டுகளில் 20 சதவிகிதத்துக்கும் அதிகமாக லாபம் அளித்த லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகளாக சிலவற்றை பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அவற்றில் முதல் 5 லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்
நிப்பான் இந்தியா லார்ஜ் கேப் ஃபண்ட்
இது கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக 20.31 சதவிகித வருடாந்திர வருமானத்தை அளித்துள்ளது. இதன் நிகர சொத்து மதிப்பு ரூ. 34,105 கோடியாக உள்ளது. செலவு விகிதம் 1.56 சதவிகிதத்தைக் கொண்ட நிப்பான் இந்தியா லார்ஜ் கேப் ஃபண்ட், கடந்த ஓராண்டில் 28.62 சதவிகித வருமானத்தை அளித்துள்ளது.
எச்டிஎஃப்சி டாப் 100 ஃபண்ட்
கடந்த ஐந்தாண்டுகளில் சராசரியாக 17.81 சதவிகித வருமானம் வழங்கிய எச்டிஎஃப்சி டாப் 100 ஃபண்ட்டின் நிகர மதிப்பு ரூ. 36,467 கோடி. கடந்த ஓராண்டில் 21.27 சதவிகித வருமானத்தை அளித்ததுடன், இதன் செலவு விகிதம் 1.60 சதவிகிதத்தையும் கொண்டுள்ளது.
ஐசிஐசிஐ புருடென்ஷியல் புளூசிப் ஃபண்ட் (ICICI Prudential Bluechip Fund)
கடந்த 5 ஆண்டுகளில் 19.49 சதவிகிதம் வருமானத்தை அளித்துள்ளது. இதன் நிகர மதிப்பு ரூ. 63,699 கோடி ஆகும். கடந்தாண்டில் 26.06 சதவிகித லாபம் கொடுத்த இந்த ஃபண்ட், செலவு விகிதம் 1.44 சதவிகிதமாகக் கொண்டுள்ளது.
இதையும் படிக்க:அதானியைவிட 2.5 மடங்கு சரிவைக் கண்ட அம்பானி!
ஜேஎம் லார்ஜ் கேப் ஃபண்ட்
நிகர மதிப்பு ரூ. 456 கோடி கொண்டுள்ள ஜேஎம் ஃபண்ட், கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டு வருமானம் 18.69 சதவிகிதம் கொடுத்துள்ளது. இதன் லாப சதவிகிதம் 28.28 சதவிகிதமாகவும், செலவு விகிதம் அதிகபட்சம் 2.36 சதவிகிதம் என்ற நிலையில் உள்ளது.
குவாண்ட் ஃபோகஸ்டு ஃபண்ட்
இந்த ஃபண்ட் கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக 21.98 சதவிகித ஆண்டு வருமானத்தை அளித்துள்ளது. செலவு விகிதம் 2.16 சதவிகிதத்துடன் நிகர சொத்து ரூ. 1,120 கோடியைக் கொண்டுள்ளது. இந்த ஃபண்ட் கடந்த ஓராண்டில் 25.21 சதவிகித வருமானத்தை அளித்துள்ளது.
எந்தவொரு முதலீட்டு முடிவுகளையும் எடுப்பதற்கு முன்பு சான்றளிக்கப்பட்ட நிபுணர்களுடன் சரிபார்க்குமாறு பொருளாதாரவியலாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.