செய்திகள் :

அஸ்வினுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

post image

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,

''நம்பமுடியாத உங்கள் விளையாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு எண்ணற்ற சிறப்புத் தருணங்களை அளித்துள்ளது. மேலும், எல்லைகளைத் தாண்டி மில்லியன் கணக்கான மக்களை பெரிய கனவு காணத் தூண்டியது.

உங்கள் புதிய அத்தியாயத்தில் நீங்கள் மகத்தான வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன்'' என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அனைந்து சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக இன்று (டிச. 18) அறிவித்தார்.

38 வயதான சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இதுவரை மொத்தமாக 765 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுவரை அதிகபட்சமாக 11 முறை தொடர்நாயகன் விருதை வென்றுள்ளார்.

“சிறுபான்மையினருக்கு அரணாக உறுதியாக நிற்போம்!” -முதல்வர் மு.க.ஸ்டாலின்

அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “எதற்கெடுத்தாலும் அம்பேத்கர் என்று சொல்வது தற்போ... மேலும் பார்க்க

தமிழகத்தில் ரூ.40 கோடியில் நவீன தொழில்நுட்ப மையங்கள் திறந்து வைப்பு!

தமிழகத்தில் ரூ. 40 கோடியில் நவீன தொழில்நுட்ப மையங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று(டிச. 18) திறந்து வைத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘தமிழகமெங்கும் 29 திறன் பயிற்சி மற்றும... மேலும் பார்க்க

முருகனைப் போன்று அம்பேத்கரையும் வணங்குகிறேன்: அண்ணாமலை

அம்பேத்கரை பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா தவறாக எதுவும் பேசவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.மேலும், எதிர்க்கட்சிகள் அம்பேத்கர் பெயரை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துகிறார்கள் எ... மேலும் பார்க்க

'சிலருக்கு அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம்' - அமித் ஷாவுக்கு விஜய் கண்டனம்!

அம்பேத்கர் குறித்துப் பேசிய அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, 2 நாள் விவாதத்தின் முடி... மேலும் பார்க்க

கலகம் என்பதை திருத்தி எழுச்சி என மாற்றிய வேங்கடாசலபதி: மு.க. ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: கலகம் என்பதை திருத்தி எழுச்சி என மாற்றியவர் ஆ.இரா. வேங்கடாசலபதி என முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ் பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு முதல்வர்... மேலும் பார்க்க

மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்!

மதுரை சிறப்புப் போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் யூடியூபர் சவுக்கு சங்கரை காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய தொடர்பாக இரண்டு மாதங்களுக்கு முன்பாக யூட்யூபர் சவுக்... மேலும் பார்க்க