செய்திகள் :

மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்!

post image

மதுரை சிறப்புப் போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் யூடியூபர் சவுக்கு சங்கரை காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.

பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய தொடர்பாக இரண்டு மாதங்களுக்கு முன்பாக யூட்யூபர் சவுக்கு சங்கர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்யும் பொழுது அவர் தங்கிய அறையில் கஞ்சா இருந்ததாக காவல்துறையினர் அதனைக் கைப்பற்றி தேனி போலீசார் ஒரு வழக்கை அவர் மீது பதிவு செய்தனர். இதனடிப்படையில் சவுக்கு சங்கர் மதுரை மாவட்ட சிறப்புப் போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவர் மீது இரண்டு முறை குண்டர் தடுப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது ஆட்கொனர்வு மனு தாக்கல் செய்தார். உச்சநீதிமன்றத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து ஜாமீன் வழக்கக் கோரி சவுக்கு சங்கர் தரப்பில் நீதிமன்றத்தை நாடியது.

இதனை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை ரத்து செய்து, ஜாமீன் வழங்கி கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி உத்தரவு வழங்கியது

மதுரை மத்தியச் சிறையிலிருந்து வெளியில் வந்த சவுக்கு சங்கர் மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக பல்வேறு அரசியல் சார்ந்த கருத்துக்களை யூடியூப் சமூக வலைத்தளத்தில் பேசி வந்தார். இந்த நிலையில் நேற்று மதுரை மாவட்டம் நீதிமன்றத்தில் முறையாக ஆஜராகாததால் மதுரை மாவட்ட சிறப்புப் போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவு வழங்கியது. இதனைத் தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டையில் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து அவர் நேற்று இரவு காவல்துறை பாதுகாப்புடன் தேனி அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மீண்டும் மதுரையில் உள்ள சிறப்புப் போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக ஆஜர் செய்யப்பட்டார்.

முருகனைப் போன்று அம்பேத்கரையும் வணங்குகிறேன்: அண்ணாமலை

அம்பேத்கரை பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா தவறாக எதுவும் பேசவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.மேலும், எதிர்க்கட்சிகள் அம்பேத்கர் பெயரை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துகிறார்கள் எ... மேலும் பார்க்க

'சிலருக்கு அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம்' - அமித் ஷாவுக்கு விஜய் கண்டனம்!

அம்பேத்கர் குறித்துப் பேசிய அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, 2 நாள் விவாதத்தின் முடி... மேலும் பார்க்க

கலகம் என்பதை திருத்தி எழுச்சி என மாற்றிய வேங்கடாசலபதி: மு.க. ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: கலகம் என்பதை திருத்தி எழுச்சி என மாற்றியவர் ஆ.இரா. வேங்கடாசலபதி என முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ் பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு முதல்வர்... மேலும் பார்க்க

ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு சாகித்திய அகாதெமி விருது

தமிழ் பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சியும் 1908 நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்களின் பட்டியல் இன்று வெளி... மேலும் பார்க்க

தங்கம் வென்ற கேரம் வீராங்கனை காசிமாவுக்கு ரூ.1 கோடி பரிசு!

அமெரிக்காவில் நடைபெற்ற 6-ஆவது உலக கேரம் போட்டியில் பங்கேற்று 3 தங்கப் பதக்கங்களை வென்ற வீராங்கனை காசிமாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து தகவலுடன் புகைப்ப... மேலும் பார்க்க

சென்னையில் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்!

சென்னையில் 48 கி.மீ வேகத்தில தரைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (18-12-2024) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு ... மேலும் பார்க்க