ரஷியாவில் புற்றுநோய் தடுப்பு மருந்து தயார்! இலவசமாக வழங்கவும் திட்டம்
ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு சாகித்திய அகாதெமி விருது
தமிழ் பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சியும் 1908 நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்களின் பட்டியல் இன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி, தமிழ் பேராசிரியர், எழுத்தாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908- என்ற நூலுக்கு 2024ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
1908ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி வ.உ.சி. கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறையின் தொடர்ச்சியாக மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டது. இந்த எழுச்சி குறித்தும், அதன் விளைவுகளையும் இந்த நூல் விரிவாக ஆராயும் வகையில் அமைந்திருக்கிறது.
திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சியும் 1908 நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டிருப்பதற்கு பல்வேறு துறை தலைவர்களும் எழுத்தாளர்களும் ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் வெளியிட்டு வருகிறார்கள்.
சுதந்திரத்திற்கு முன்பு நடந்த எழுச்சிகளில் மிகவும் முக்கியமானது 1908ல் நடந்த திருநெல்வேலி எழுச்சி. நெல்லையிலும் தூத்துக்குடியிலும் அப்போது ஏற்பட்ட மக்கள் எழுச்சியையும் அதன் தாக்கத்தையும் பல அரிதான தகவல்களுடன் எடுத்துச் சொல்லும் ஆய்வு நூல் 'திருநெல்வேலி எழுச்சியும் வ.உசி.யும் 1908' என்று சு. வெங்கடேசன் எம்.பி. புகழ்ந்துள்ளார்.
மத்திய அரசின் சார்பில், நாட்டில் உள்ள 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகளை தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான விருதாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழ் பிரிவில் திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யு - 1908 என்ற ஆய்வு நூலை எழுதிய தமிழ் பேராசிரியர் ஏ.ஆர். வெங்கடாசலபதிக்கு சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.